TN Hall Tickets 2022 for SSLC: 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) ஏப்ரல் 22 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த வகையில் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்குகிறது.
இதற்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நாளை (ஏப்ரல் 22) பிற்பகல் முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இது பற்றிய தகவல் மாணவர்களுக்கு அவர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான அனுமதிச் சீட்டை தனித்தேர்வர்கள் நேற்று (ஏப்ரல் 20) முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: TNPSC Exam: இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய 4 தேர்வுகள்; தகுதிகள் என்ன?
மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய மாணவர்கள் முதலில், மேற்கண்ட இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தாங்கள் பயிலும் வகுப்பு விவரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயனர் எண் (USER ID) மற்றும் கடவுச் சொல் (PASSWORD) கொண்டு உள்நுழைந்து, தங்களின் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துக் கொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil