Advertisment

NEET UG 2021: நீட் கவுன்சிலிங் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வது எப்படி?

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமாக 1 லட்சத்து 24 ஆயிரம் காலி இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், ஆண்டுதோறும் நீட் தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET UG 2021: நீட் கவுன்சிலிங் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வது எப்படி?

சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்பது பலரின் கனவாகும். ஆனால், அத்தகைய கனவை நனவாக்குவதில் என்டிஏ நடத்தும் நீட் தேர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ நுழைவு தேர்வான நீட்டில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே, மருத்துவ கல்லூரியில் சேர முடியும். நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் மூலம் தரவரிசை பட்டியில் தயார் செய்யப்படும். அதனடிப்படையில், நீட் கவுன்சிலிங் நடைபெறும்.

Advertisment

15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.

அரசு மருத்துவ கல்லூரிகளின் காலி இடங்கள் எண்ணிக்கை

எம்பிபிஎஸ் - 67,000

பிடிஎஸ் - 27,000

ஆயுஷ் - 30,000

இதை கணக்கிட்டால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமாக 1 லட்சத்து 24 ஆயிரம் காலி இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், ஆண்டுதோறும் நீட் தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகின்றனர். எனவே, மருத்துவ படிப்பில் அரசு கல்லூரிகளில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி இருக்கும்.

அதே சமயம், நீட்டில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும், தனியார் மருத்துவ கல்லூரிகள் எளிதாக இடம் கிடைத்துவிடும். ஆனால், அதற்கு பணம் நன்கொடையாக கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். வசதிப்படைத்தோர் எவ்வித கவலையின்றி எளிதாக தனியார் கல்லூரியில் சேரலாம்.

15 விழுக்காடு அகில இந்திய இட ஒதுக்கீடு செயல்முறைக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களை பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் பேஸ் 2 பிராசஸை கட்டாயம் முடித்திருக்க வேண்டும். அதில், நீங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் விருப்பம் கேட்கப்படும். அதனை பூர்த்தி செய்ய வேண்டும். பேஸ் 2 பிராசஸ் செய்யாதோர்களுக்கு, நீட் தேர்வு முடிவு வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்கள் தகுதி விவரம்

  • விண்ணப்பத்தாரருக்கு 17 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்
  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற வேண்டும்
  • நீட் கவுன்சிலிங் நடத்தும் மாநில அதிகாரிகள் அறிவித்த தகுதிகள் இருக்க வேண்டும்.
  • நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.

நீட் கட்ஆஃப் விவரங்கள்

பிரிவு கட்ஆஃப் சதவிகிதம் கட்ஆஃப் மதிப்பெண்
பொதுபிரிவு 50% 720-147
பொதுபிரிவு(ph) 45% 146- 130
எஸ்,எஸ்டி,ஓபிசி 40% 145-112
எஸ்,எஸ்டி,ஓபிசி(ph) 40% 129-112

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment