நாட்டின் உயர் மருத்துவ கல்லூரிகளில் அடி எடுத்து வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் மனதில் எழும் கேள்வி, ஒரே நேரத்தில் நீட் மற்றும் AIIMS தேர்வுகளுக்கு தயார் செய்ய வேண்டும் என்பது தான்.
நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும். உயிரியல் 360, வேதியியல் 180 மற்றும் இயற்பியல் 180 என மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வில் கேள்வி கேட்கப்படும்.
AIIMS தேர்வைப் பொறுத்தவரை உயிரியல், இயற்பியல், வேதியியல், ஆப்டிட்யூட் மற்றும் பொது அறிவு ஆகிய பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மூன்றரை மணி நேரத்தில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு இதற்கான தேர்வு நடைபெறும். நீட்டைப் போல இதிலும் முதன்மையான பாடங்கள் உயிரியல், வேதியியல், இயற்பியல் தான். இம்மூன்றும் தலா 60 மதிப்பெண்களுக்கும், ஆப்டிட்யூட் மற்றும் பொது அறிவு ஆகிய பாடங்களில் தலா 10 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எய்ம்ஸ் தேர்வு நடைபெறும்.
மேலும் நீட் மற்றும் எய்ம்ஸ் ஆகிய தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களிலும் சிறப்பு கவனம் செலுத்தி, தேர்வுக்கு தயாராக வேண்டும்.
இதற்கிடையே தங்களுக்கு விருப்பமான துறையை மாணவர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
தாயர் செய்யும் முறை
மூன்று முதன்மையான பாடங்களுக்கும் தலா 3 மணி நேரம் வீதம் தினமும் மாணவர்கள் தங்களை தயார் படுத்த வேண்டும். ஆப்டிட்யூட் மற்றும் பொது அறிவு ஆகியவற்றிற்கு தலா அரை மணி நேரம் போதுமானது.
ஆப்டிட்யூடை பொறுத்தவரை, கடந்தாண்டு வினாத்தாளை ரெஃபரென்ஸாக வைத்து மாணவர்கள் தயாராகலாம். செய்தித்தாள்கள் மூலம் கரண்ட் அஃபைர்ஸை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மோக் டெஸ்ட்
நீட் மற்றும் எய்ம்ஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தலா ஒவ்வொரு மோக் டெஸ்ட் எழுத வேண்டும். அதன் அடிப்படையில் தமது வலிமை மற்றும் வலிமையின்மையினை மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.