ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? டிப்ஸ் இதோ

education news in tamil, how prepare jee exams tips: இந்த ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வுகளில் ஏப்ரல் மாத தேர்வு விரைவில் நடைபெற உள்ளதால் இந்த முயற்சியில் வெற்றி பெற நினைக்கும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். முடிவுகளைப் பற்றியோ அல்லது கிடைக்ககூடிய அடுத்த முயற்சிகளை பற்றியோ சிந்திக்க வேண்டாம். ஒரு மாணவர் இந்த ஆண்டிற்கான நான்கு தேர்வுகளையும் எழுதினால் அவருக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மேலும், பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் தொடங்குவதால் மாணவர்கள் இரண்டு தேர்வுகளுக்கும் சரியான முறையில் தயாராக வேண்டும்.

இந்த ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வுகளில்  ஏப்ரல் மாத தேர்வு விரைவில் நடைபெற உள்ளதால் இந்த முயற்சியில் வெற்றி பெற நினைக்கும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். முடிவுகளைப் பற்றியோ அல்லது கிடைக்ககூடிய அடுத்த முயற்சிகளை பற்றியோ சிந்திக்க வேண்டாம். ஒரு மாணவர் இந்த ஆண்டிற்கான நான்கு தேர்வுகளையும்  எழுதினால் அவருக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மேலும், பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் தொடங்குவதால் மாணவர்கள்  இரண்டு தேர்வுகளுக்கும் சரியான முறையில் தயாராக வேண்டும். மீதமுள்ள நேரத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் இரண்டு தேர்விகளிலும் வெற்றி பெற முடியும்.

மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு மிக கடினமாக உழைக்க வேண்டும் ஏனெனில் 30 நாட்கள் மட்டுமே உள்ளன, தினமும் 9 முதல் 10 மணி நேரம் வரை படிக்க வேண்டும்

பயிற்சி அவசியம்

பயிற்சி தேர்வுகளை ஒரு மாணவர் தவறாமல் எடுக்க வேண்டும். இந்த தேர்வுகள் அவரின் பலம் மற்றும் பலவீனங்களை பகுப்பாய்வு செய்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் பயன்படும். மேலும் மாணவர்கள் பயிற்சி தேர்வுகள் மூலம் அடுத்த ஜேஇஇ தேர்வில் தங்கள் பலவீனமான இடங்களை சரி செய்ய முடியும்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நன்கு தெரிந்த பாடங்களை முதலில் படிக்க  திறமையின் அடிப்படையில் பாடங்களை முயற்சிப்பதன் மூலம் தேர்வை வேண்டும்.. ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு பாடத்தில் திறமையாளர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு விருப்பமானதை முதலில் படிக்க வேண்டும். மேலும், எந்தவொரு ஆலோசனையும் அப்படியே செய்யாதீர்கள் உங்கள் திறமைக்கு ஏற்ப உங்கள் அணுகுமுறையை முயற்சி செய்யுங்கள்.

நேரத்தை திறம்பட ஒதுக்கீடு செய்தல்

எல்லா பாடங்களுக்கும் சமமான நேரத்தை செலவிடுவதே சிறந்த அணுகுமுறை. இருப்பினும் ஒரு மாணவர் அவர்களின் பலவீனமான பாடங்களுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கி கொள்வது நல்லது.

எடுத்துக்காட்டாக வேதியியல் அதிக மதிப்பெண் உள்ள பாடமாகும். அதை தொடர்ந்து இயற்பியல் மற்றும் கணிதம் உள்ளன. இந்த வரிசைப்படி ஒரு மாணவர் இந்த பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி படிக்கலாம். 11ஆம் வகுப்பு பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். ஏனெனில் 12ஆம் வகுப்பு பாடங்களை மாணவர்கள் தற்போது பொதுத் தேர்வுகளுக்கு படித்திருப்பீர்கள்

11 ஆம் வகுப்பிலிருந்து சில முக்கிய பாடங்கள்

இயற்பியல்

வெப்ப இயக்கவியல்

வாயுக்களின் இயக்கவியல் கோட்பாடு

அலைவு மற்றும் அலைகள்

அலகுகள் மற்றும் அளவீடுகள்

சுழற்சி இயக்கவியல்

வேதியியல்

ஹைட்ரஜன்

S- தொகுதி தனிமங்கள்

P- தொகுதி தனிமங்கள்

D மற்றும் F தொகுதி தனிமங்கள்

மூலக்கூறுகளின் வகைப்பாடு மற்றும் பண்புகளில் கால அளவு

உலோகங்களை தனிமைப்படுத்துவதற்கான பொதுவான கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகள்

கணிதம்

வடிவியலை ஒருங்கிணைத்தல்

Sets, உறவுகள் மற்றும் செயல்பாடுகள்

சிக்கலான எண்கள் மற்றும் இருபடி சமன்பாடுகள்

அணிகள்

வரிசை மாற்றங்கள் மற்றும் சேர்க்கைகள்

மாணவர்கள் இந்த தலைப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த பாடங்களில் உட்கருத்துக்கள் மற்றும் பயிற்சிகளுடன் தயாராக இருக்க வேண்டும்.

உங்கள் ஆரோக்கியம் முக்கியம்

மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாரவதால் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். தேர்வுகளுக்கு தயாரவதோடு ஆரோக்கியமும் மிக முக்கியம். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். வறுத்த மற்றும் துரித உணவுகளை தவிர்க்கவும். ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி விட்டு படிக்க வேண்டும். நடைபயிற்சி மற்றும் தூக்கம் அவசியம். சிறிது நேரம் இசை கேட்கலாம்.

ஜே இ இ தேர்வுகளின் அனைத்து முயற்சிகளிலும் தோன்றுவது மற்றொரு முக்கிய ஆலோசனையாகும். இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என நான்கு முறை தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. மேலும் இந்த நான்கு முயற்சிகளில் சிறந்த மதிப்பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த நான்கு தேர்வுகளையும் எழுதுவதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெறலாம். இறுதியில் ஒரு நல்ல தரவரிசையைப் பெறலாம்.

பொதுத் தேர்வுகளைத் தொடர்ந்து இந்த முறை மே மாத தேர்வுக்கு   குறைந்த நேரம் மட்டுமே இருந்தாலும் ஏற்கனவே நடைபெற்ற 3 முன் முயற்சிகளில் ஒரு மாணவர் எழுதியிருந்தால் இந்த முறை ஒரளவு வெற்றி பெறுவதையும் சிறந்த சதவீதத்தையும் பெற முடியும்.  ஒரு மாணவர் இந்த தேர்வில் 95 சதவீதத்தை அடைய முடிந்தால், அவர் தனது முயற்சிகளை  ஜேஇஇ  அட்வான்ஸ்டு தேர்வுகளில் கவனம் செலுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to prepare jee exams tips

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com