எழுத்துத்தேர்வு இல்லை; இன்டர்வியூ மட்டும்தான்: தமிழக அறநிலையத் துறையில் பணியிடங்கள்

எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு நடைபெறுவதால் இந்து அறநிலையத் துறையின் இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கலந்துகொள்ளலாம்.

Hindu Religious and Charitable Endowments Department Employment, HRCE, no written exam,HRCE post, HRCE direct interview, எழுத்துத்தேர்வு இல்லை, இன்டர்வியூ மட்டும்தான், தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையில் பணியிடங்கள், வேலைவாய்ப்பு, Employment news, Tamil nadu govt employment news, tamil nadu, HRCE Employment

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருவேற்காடு மற்றும் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், ஓட்டுநர், கடைநிலை ஊழியர் போன்ற 23 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை; இண்டர்வியூ மட்டும்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

திருவேற்காடு மற்றும் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், ஓட்டுநர், கடைநிலை ஊழியர் போன்ற 23 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. விருப்பம் உடையவர்கள் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் திருவேற்காடு மற்றும் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், ஓட்டுநர், கடைநிலை ஊழியர் போன்ற 23 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் உள்ளன. நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி இடங்களின் விவரங்கள் :

இணையதள முகவரி:

http://www.hrce.tn.gov.in இந்து சமய அறநிலையத்துறை ( TNHRCE)

வேலையின் பெயர் அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர், பரிசாரகர், தமிழ்ப்புலவர், அம்மன் படப்பள்ளி மற்றும் பல பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் நேர்முகத் தேர்வுகளுக்கு வரவேற்கப்படுகின்றனர்.

மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பவரின் வயது 01.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22.10.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தேர்வாகி பணியில் சேர்பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை சம்பளம் வழங்கப்படும். பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.

திருவேற்காடு மற்றும் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் வேலைக்கான கல்வித் தகுதி விவரம் : பத்தாம் வகுப்பு

விருப்பம் உடையவர்கள் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

நேர்காணல் நடைபெறும் இடம் முகவரி :

இணை ஆணையர், செயல் அலுவலர், அருமிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை – 600077

எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு நடைபெறுவதால் இந்து அறநிலையத் துறையின் இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கலந்துகொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hrce department announced employment no written exam but direct interview

Next Story
TNPSC Jobs: தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X