Fresh dates for JEE (MAIN) & NEET on May 5: ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவு தேர்வு (ஜே.இ.இ) மற்றும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கான (நீட்) புது தேதிகளை வரும் மே 5 அன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சகத்தின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியாவில் பொது முடக்க நிலை நீட்டிக்கப்பட்டதால், இந்த மாதம் இறுதி வரை நீட் மற்றும் ஜேஇஇ முதன்மை தேர்வுகள் ஒத்துவைக்கப்படுவதாக மத்திய அரசு முன்னர் அறிவித்திருந்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளிடம் பேசிய ரமேஷ் பொக்ரியால் நிஷாக், ஜே.இ.இ, நீட் தேர்வுக்கான புது தேதிகள் அறிவிப்பதற்கு முன்பு, தேர்வு தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தேர்வு வாரியங்கள், ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் போன்ற பிற அமைப்புகளுடன் ஆலோசத்தி வருவதாக தெரிவித்தார்.
முன்னதாக, 18.03.2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஜே.இ.இ. பிராதன எழுத்து தேர்வு 5,7,9 மற்றும் 11 ஏப்ரல், 2020 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், மே 3 அன்று நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது . நீட் தேர்வுக்கு தோராயமாக 16 லட்சம் தேர்வர்களும் , ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கு 9 லட்சம் தேர்வர்களும் விண்ணப்பத்திருன்தனர்.
இதற்கிடையில், மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மாணவர்களோடு வரும் மே 5 ஆம் தேதி ஆன்லைனில் உரையாட இருப்பதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டரில்,"மாணவர்களே, எனது ட்விட்டர் (rDrRPNishank) & Facebook (mcmnishank) பக்கங்கள் வழியாக நான் உங்களுக்காக பிரத்தியேகமாக காணொலி காட்சியில் கலந்து கொள்ள இருக்கிறேன் . தயவுசெய்து, மே 5 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு என்னுடன் இணையுங்கள்! அதுவரை #EducationMinisterGoesLive ஐப் பயன்படுத்தி உங்கள் கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு காண்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்! ” என்று பதிவு செய்துள்ளளர்.
ஜே.இ.இ முதன்மை தேர்வு , நீட் ஆகிய தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தில் திருத்தம் செய்யும் வாய்ப்பு இன்றுடன் (மே - 3) முடிவடிகிறது. வேட்பாளர்கள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மையங்களை (பாதுக்காப்பு சூழலுக்கு தகுந்த) மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். வேட்பாளர்கள் தேசிய தேர்வு முகமையின் வலை தளத்தின் - jeemain.nta.nic.in, ntaneet.nic.in மூலம் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil