சென்னை ஐஐடி தேசிய அளவில் முதலிடம் : NIRF தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை  பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஐஐஎஸ்சி பெங்களூரும், மூன்றாவது இடத்தில் டெல்லி ஐஐடி உள்ளது

IIT Madras Tops In NIRF Ranking: 2020ம் ஆண்டிற்கான இந்தியாவின் உயர்க்கல்வி நிறுவனங்களின் தேசியளவிலான தரவரிசைப் பட்டியலை (NIRF)மதிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வெளியிட்டார்.

சர்வேதச அளவிலான பல்கலைக்கழகங்களின் பட்டியலை ஐ.ஐ.டி நிறுவனங்கள் பெரிதும் சோபிக்கவில்லை என்றாலும், இந்த தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை  பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஐஐஎஸ்சி பெங்களூரும், மூன்றாவது இடத்தில் டெல்லி ஐஐடி உள்ளது.

 

 

தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் மிராண்டா ஹவுஸ் ( புதுதில்லி) முதல் இடத்தைப் பிடித்துள்ளது. லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லூரி( புது தில்லி) , இந்து கல்லூரி(புது தில்லி), புனித ஸ்டீபன் கல்லூரி( புது தில்லி), பிரசிடென்சி கல்லூரி (சென்னை) ஆகிய கல்லூரிகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு முதல் இடத்தை பிடித்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி  இரண்டாவது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலுக்கு கூடுதலாக 20 சதவீத உயர்க்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

முதன் முறையாக பல் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு தனியான பட்டியல் தயாரிக்கப்பட்டது. மவுலானா ஆசாத் பல் மருத்துவ அறிவியியல் மையம், தில்லி; மணிபல் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, உடுப்பி; டாக்டர் டி.ஒய். பாட்டீல் வித்யாபீத், புனே ஆகிய பல்மருத்துவ கல்லூரிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

கட்டிடக்கலை பிரிவில்,இந்திய தொழில்நுட்ப மையம், காரக்பூர் முதலிடத்தைப் பிடித்தது. இந்திய தொழில்நுட்ப மையம், ரூரகே; இந்திய தொழில்நுட்ப மையம், கோழிக்கோடு ஆகிய கல்வி நிறுவனங்கள் அடுத்ததுத்த இடங்களைப் பிடித்தன.

டெல்லி ஜாமியா ஹம்டார்ட் சிறந்த மருந்தியல் கல்வி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

NIRF தரவரிசைப் பட்டியலில், மேலாண்மை பிரிவில் இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாத் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய மேலாண்மை கழகம், பெங்களூரு, கொல்கத்தா முறையே அடுத்தடுத்த இடங்களில் பிடித்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close