இஸ்ரோ தலைவர் கி. கஸ்தூரிரங்கன் தலைமையிலான வல்லுநர்கள் குழு ஜூன் மாதத்தில் வரைவு தேசிய கல்விக் கொள்கயை மனிதவளம் மேம்பாடு அமைச்சகத்திடம் சமர்பித்தது. அந்த வரைவுக் கொள்கையில் , இந்தியாவில் இருக்கும் அனைத்து மாணவர்களும், குறிப்பாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்கையை மேம்படுத்துவதற்காக, தற்போது 6 முதல் 14 வயது வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி 3 முதல் 18 வயதாக நீட்டிக்க பரிந்துரைத்தது.
அதாவது, கல்வி உரிமை சட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தற்போது இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கொடுக்கப்பட வேண்டும் . மேலும், இந்த சட்டத்தில் தனியார் பள்ளிகள் 25 சதவீதத்தை அந்த பகுதியில் இருக்கும் பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யவேண்டும். அதற்கான, செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.
ஒரு மனிதன் பின்நாளில் எவ்வாறு வருவான் என்பது அவனின் மூன்று வயதில் தான் தீர்மானிக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய கஸ்தூரிரங்கன்குழு, கல்வி உரிமையை சட்டத்தை ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய ஆரம்பக் கல்விக்கும் எடுத்து செல்லவேண்டும் என்றும், எட்டாம் வகுப்போடு நின்று விடாமல் 12ம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டயாமாகக் கல்வி கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
இந்த வரைவுக் கொள்கையை அமைச்சரவையில் இறுதி செய்வதற்கு முன்பாக, பொது மக்களிடம் கருத்தும் கேட்டுவந்தது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் . இரண்டு லட்சம் பரிந்துரைகள் அரசாங்கத்திற்கு சென்றது.
விரைவில் முடிவு செய்யப்படும் இந்த தேசியக் கல்வி கொள்கை நடைமுறை படுத்துவதற்கான ஆறு கோட்பாடுகளை மனித வளம் மேம்பாட்டு அமைச்சகம் இன்று( அக்டோபர் 29ம் தேதி ) அறிவித்தது. அந்தக் கோட்பாடில், கல்வி உரிமை சட்டம் ஒன்று முதல் 12ம் வரை நீட்டிப்பு தொடர்பாக , பின் நாட்களில் பரிசீலிக்கப்படும் என்று மட்டுமே இருந்தது.
கஸ்தூரிரங்கன் குழு கட்டாயம் நீட்டிக்க வேண்டும் என்று சொல்லியதற்கும், தற்போது மனித வழ மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கொடுத்த கோட்பாட்டிலும், கல்வி உரிமை சட்டத்தின் எதிர்காலம் வித்தியாசப்படுகிறது.
இதனால், வரவிருக்கும் இறுதி கல்விக் கொள்கையில் கஸ்தூரிரங்கனின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படுமா? என்பது போக போகத்தான் தெரியும்.