மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” மேல்நிலை வகுப்புகளுக்கான (வகுப்பு XI மற்றும் XII) மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணையை வெளியிட்டார்.
இதுகுறித்து பத்திர்க்கை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், " ஊரடங்கு காரணமாக மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் சூழலில் அவர்களின் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுவதற்கு உதவும் வகையில் இந்தக் காலஅட்டவணையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் - என்சிஇஆர்டி உருவாக்கியுள்ளது. மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட இந்த அட்டவணையானது உதவும்" என்று தெரிவித்தது.
இந்தக் காலஅட்டவணையை வெளியிட்டு உரையாற்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர், "வேடிக்கையாகவும் ஆர்வத்துடனும் கல்வி கற்பதற்காகக் கிடைக்கக்கூடிய பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சமூக ஊடக உபகரணங்களை ஆசிரியர்கள் எப்படிப் பயன்படுத்துவது என்ற வழிகாட்டுதல்களைத் தரும் என்றும், இவற்றை வீட்டில் இருந்தபடியே மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தலாம்" என்றும் தெரிவித்தார்.
இணைய வசதி இல்லாத அல்லது வாட்ஸ்அப், முகநூல், கூகுள் முதலான சமூக ஊடக உபகரணங்களைப் பயன்படுத்த முடியாத மாணவர்கள் மொபைல் போன் மூலம் குறுஞ்செய்தி சேவை அல்லது குரல்வழி அழைப்பு மூலம் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் எவ்வாறு வழிகாட்டுவது என்பது குறித்து இந்தக் காலஅட்டவணையானது ஆசிரியர்களுக்கு வழிகாட்டுகிறது என பொக்ரியால் குறிப்பிட்டார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் (சிறப்புத்தேவை உள்ள குழந்தைகள்) உள்ளிட்ட அனைத்து குழந்தைகளின் தேவையையும் இந்தக் காலஅட்டவணை பூர்த்திசெய்யும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதாவது ஒலிவடிவ நூல்கள், வானொலி நிகழ்ச்சிகள், வீடியோ நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கான இணைப்புகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.
Released The Alternative Academic Calendar for Classes XI and XII developed by @ncert today!
This Calendar directs teachers on the use of various technological tools/social media tools to educate students while they are at home. #covid19 pic.twitter.com/jwTq0yVogQ
— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 3, 2020
பாடத்திட்டம் அல்லது பாடபுத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மையக்கருத்து / அத்தியாயத்தின் அடிப்படையில் ஆர்வமூட்டும் மற்றும் சவாலான நடவடிக்கைகளை உள்ளடக்கிய வாராந்திர செயல்திட்டத்தின் அடிப்படையில் காலஅட்டவணை உள்ளது. இது மையக்கருத்துகளை கற்றல் விளைவுகளோடு வரைபடம் மூலம் இணைக்கிறது. கற்றல் விளைவுகளோடு மையக்கருத்துகளை வரைபடம் மூலம் இணைப்பது என்பது குழந்தையில் கற்றல் செயலில் ஏற்படும் முன்னேற்றத்தை ஆசிரியர் / பெற்றோர் மதிப்பீடு செய்ய உதவியாக இருக்கும் என்று பத்திர்க்கை தகவல் அலுவலகம் தெரிவித்தது.
காலஅட்டவணையானது கலைகள், கல்வி. உடற்பயிற்சி, யோகா போன்ற அனுபவக் கற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்தக் காலஅட்டவணை வகுப்பு வாரியான மற்றும் பாடம் வாரியான செயல்பாடுகளை அட்டவணை வடிவத்தில் தருவதோடு இந்தி, ஆங்கிலம். உருது மற்றும் சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளைப் பாடங்களாகக் கொண்டு அது தொடர்பான செயல்பாடுகளையும் உள்ளடக்கி இருக்கிறது என்றும் தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.