தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற 8 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற்றன. இந்த தேர்வின் முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டது. ஆனால், நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளதால், நீட் தேர்வுக்குப் பிறகு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படியுங்கள்: பிளஸ் டூ ரிசல்ட் தேதி மாற்றம்; காரணம், நீட் தேர்வு: அன்பில் மகேஷ் முக்கிய அப்டேட்
இந்தநிலையில், நீட் தேர்வு 7 ஆம் தேதி நடைபெறுவதால், மாணவர்கள் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி வேறு தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 8 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12 ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவுகள் 08.05.2023 அன்று அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரிகளிலும் தெரிந்துக் கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in
தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் எவ்வித கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil