மத்திய உதவி புலனாய்வு அதிகாரி கிரேடு II-க்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 2,000 காலியிடங்கள் நிரப்பப்படும்.
ஆர்வமுள்ள தேர்வர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mha.gov.in இல் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 9 அன்று 11:59 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
100 மதிப்பெண்கள் அடங்கிய நிலை-1 தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இதில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 35 ஆகும். இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஈ.
தேர்வு கட்டணம் : தேர்வுக் கட்டணமாக 100 ரூபாயும் , ஆட்சேர்ப்பு செயலாக்கக் கட்டணமாக 500 ரூபாயும் செலுத்த வேண்டும். பட்டியலின மாணவர்கள், பழங்குடியின மாணவர்கள்,முன்னாள் ராணுவ வீரர்கள், பெண் தேர்வர்களுக்கு ஆட்சேர்ப்பு செயலாக்கக் கட்டணங்கள் மட்டும் கட்ட வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Ib acio 2021 examination ib acio exam apply online