Advertisment

புலனாய்வுப் பிரிவில் பல்வேறு பணியிடங்களுக்கு அழைப்பு! முழு விவரம்

அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Air force recruitment 2019

புலனாய்வுப் பிரிவில் 318 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

Advertisment

புலனாய்வுப் பிரிவு, உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பிரிவுகளில், பல்வேறு பொறுப்புகளில் 318 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. துணை பாதுகாப்பு அதிகாரி (ASO), மத்திய துணை புலனாய்வு அதிகாரி, இளநிலை புலனாய்வு அதிகாரி, முதுநிலை ஆராய்ச்சி அதிகாரி உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இன்ஜினியரிங் டிகிரி முடித்தவர்கள், ஏதாவது ஒரு பாடப் பிரிவில் டிகிரி முடித்தவர்கள், இயற்பியலில் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள், புள்ளியியலில் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள், அக்கவுண்ட்ஸ் அல்லது 12வது தேர்ச்சி பெற்று, முறையான பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி முழு விவரம்:

துணை இயக்குனர் / டெக் : பொறியியலில் இளங்கலை பட்டம் (பி.இ அல்லது பிடெக் அல்லது பிஎஸ்சி(Engg) அங்கீகரிக்கப்பட்ட பல்கலை / நிறுவனத்தில் இருந்து பயின்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன்ஸ் முடித்திருக்க வேண்டும்.

முதுநிலை அக்கவுண்ட்ஸ் அதிகாரி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை/இன்ஸ்டிடியூட்டில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை ஆய்வு அதிகாரி: எகனாமிக்ஸ்/புள்ளியியல்/தொழில் நிர்வாகம்/மேலாண்மை அல்லது வர்த்தகம்

பாதுகாப்பு அதிகாரி (டெக்னிக்கல்): எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் அல்லது இயற்பியல் அல்லது வேதியியலில் எம்எஸ்சி

இளநிலை புலனாய்வு அதிகாரி - ii/Tech: 12 வது வகுப்பு பாஸ். கணிதம், இயற்பியலில் இரண்டு ஆண்டு இண்டஸ்ட்ரியல் பயிற்சி வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

Joint Deputy Director/G. Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S.P. Marg, Bapu Dham, New Delhi-21 என்ற முகவரிக்கு விண்ணப்பதாரர்கள், முறையான ஆவணங்களை இணைத்து, அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அனுப்பிவிட வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment