பட்டப் படிப்பு தகுதி; ஆன்லைன் தேர்வு; IBPS அறிவித்த 5830 கிளர்க் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

IBPS Clerk 2021 notification released, exam in August: ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற ஆகஸ்ட் 28, 29 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

IBPS Clerk Recruitment 2021-22;  நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 5,830 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 268 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாக செய்யப்படுவதால், ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீங்கள் விண்ணப்பிக்கும்போது, தேர்வு செய்த மாநிலத்தில் உள்ள தேர்வு மையங்களே உங்களுக்கு தேர்வு எழுதுவதற்காக வழங்கப்படும்.

இந்த ஆண்டு பங்கேற்கும் வங்கிகள் – பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா.

இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://www.ibps.in/ OR https://ibpsonline.ibps.in/crpcl11jun21/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதிகள்:

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர் 01.07.2021 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். கணினி தொடர்பாக டிப்ளமோ, டிகிரி அல்லது சான்றிதழ் படிப்பு அவசியம்.

முக்கிய தேதிகள்

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி 12.07.2021 ஆகவும் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 01.08.2021 ஆகவும் ஐபிபிஎஸ் ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆக உள்ளது. SC/ST, PWD, EXSM பிரிவுகளுக்கு ரூ. 175 ஆகவும் உள்ளது.

தேர்வு முறை:

இதில் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு இரண்டு படிநிலைகள் உண்டு. இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் எழுத்து தேர்வுகளாக மட்டுமே நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language),  திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம் ஆகும். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற ஆகஸ்ட் 28, 29 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 190 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம் 40 நிமிடங்கள். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும். இந்த முதன்மைத் தேர்வுகள் 31.10.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு இரண்டும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடைபெறும். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ibps clerk 2021 notification released exam in august ibps

Next Story
143 அரசு கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் அட்மிஷன்: 1 லட்சம் மாணவர்களை சேர்க்க ஏற்பாடுdirectorate of collegiate education, TN govt plans Online Admission in Government Art Colleges, அரசு கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் அட்மிஷன், ஆன்லைன் மாணவர் சேர்க்கை, ஆன்லைன் வழியாக மாணவர்களை சேர்க்க ஏற்பாடு, தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்குனரகம், Online Admission in Government Art Colleges, tamil nadu, govt college admission in online, tn govt college admission
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com