IBPS Clerk 2025; பொதுத் துறை வங்கிகளில் 10277 கிளர்க் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

அருமையான வங்கி வேலை வாய்ப்பு; 10277 பணியிடங்கள்; ஆன்லைன் விண்ணப்பம்; பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அருமையான வங்கி வேலை வாய்ப்பு; 10277 பணியிடங்கள்; ஆன்லைன் விண்ணப்பம்; பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
ibps bank jobs

நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 10277 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 

Advertisment

பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாக செய்யப்படுவதால், ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

இந்த ஆண்டு பங்கேற்கும் வங்கிகள் - பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா.

Customer Service Associate

Advertisment
Advertisements

காலியிடங்களின் எண்ணிக்கை: 10277

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2025 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். கணினி தொடர்பாக டிப்ளமோ, டிகிரி அல்லது சான்றிதழ் படிப்பு அவசியம். 

சம்பளம்: 24050-1340/3-28070-1650/3-33020-2000/4-41020-2340/7-57400- 4400/1-61800-2680/1-64480

தேர்வு முறை: இதில் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு இரண்டு படிநிலைகள் உண்டு. இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். 

முதல்நிலைத் தேர்வு: 

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம் ஆகும். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு: 

முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 155 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும். இந்த முதன்மைத் தேர்வுகள் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு இரண்டும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடைபெறும். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://www.ibps.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆக உள்ளது. SC/ST, PWD, EXSM பிரிவுகளுக்கு ரூ. 175 ஆகவும் உள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 21.08.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Jobs bank

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: