வங்கியில் வேலை சேர ஐபிபிஎஸ் தேர்வு எழுதியவரா நீங்கள்? உங்கள் ரிசல்ட்டை பார்ப்பது எப்படி?

IBPS Clerk Prelims Result 2018 to be Announced Soon: தேர்வு முடிவுகளை ibps.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

By: Updated: December 29, 2018, 02:52:44 PM

IBPS Clerk Examination Result to be Declared Soon:வங்கியில் கிளர்க் பணியிடங்களுக்கான ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைப்பெற்றது. இந்த தேர்வை எதிர்க் கொண்டவர்கள் ஆவலுடன் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

இதோ உங்களுக்கான நேரம் வந்து விட்டது. ஐபிபிஎஸ் தேர்வு முடிவுகள் ஜனவரி 2019 முதல் வாரம் வெளியாகின்றன. முதல் பகுதிநேர அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வுக்கான வினாக்கள் கடந்தாண்டை விட எளிதாக இருந்தது என தேர்வு எழுதியவர்கள் கூறியிருந்தனர்.

வங்கிப்பணியில் சேர்வதற்கு நடத்தப்படும் தேர்வுகளில் ஐபிபிஎஸ் முதன்மையானது. இந்தாண்டு ஐபிபிஎஸ் கிளர்க் தேர்வு இரண்டு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) டிசம்பர் 8, 9, 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடத்தப்பட்டன.

இதன் முதன்மைத் தேர்வு (Main Exam) வரும் 2019 ஜனவரி 20ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு 2019 ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும்.

இந்நிலையில் கிளர்க் பணியிடங்களுக்கான ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 2019 முதல் வாரம் வெளியாகின்றன என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்துள்ளது. தேர்வு எழுதியவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை ibps.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தொடக்க நிலையில் ஐபிபிஎஸ் நிர்ணயம் செய்கின்ற கட் ஆப் மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு பிரதான தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். 190 கேள்விகள் உள்ள மெயின் தேர்வுக்கான நேரம் 160 நிமிடங்கள் வழங்கப்படும்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ibps clerk prelims result 2018 result to be announce soon ibps in check how to download result

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X