12,000 ஐபிபிஎஸ் பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது ?

இந்த காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது .

By: Published: October 1, 2019, 3:27:31 PM

IBPS clerk 2020:  பொதுத்துறை வங்கிகளில் 12000 க்கும் மேற்பட்ட  கிளார்க் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கியுள்ளது ஐபிபிஎஸ் என்றழைக்கப்படும்  வங்கி பணியாளர்கள் தேர்வு வாரியம்.

இந்த காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது . எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் ibps.in  என்ற இணையத் தளம் சென்று  விண்ணப்பிங்கள்.

இப்பணிக்கான முதல்நிலை தேர்வு( ப்ரிலிமினரி தேர்வு ) வரும் டிசம்பர்(2019) 7, 8, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகின்றன. முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு)  2020, ஜனவரி 19 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வுக்கான நுழைவு அட்டை நவம்பரில் வெளியிடப்படும் . அடுத்த வருடம் மார்ச் முதல் வாரத்திற்குள் தேர்வாகும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைக் கொடுக்கப்படலாம்,

 தகுதிகுறித்த தகவல்கள் 

வயது: தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 20 வயது கடந்திருக்க வேண்டும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருத்தல் வேண்டும். (ர்சர்வ்டு கேட்டகிரிகளில்   உயர் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்)

கல்வி: விண்ணப்பதாரர் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருப்பவர்கள் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தங்கள் படிப்பு முடிவு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

விண்ணப்பிப்பது எப்படி :

ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான ibps.in ஐப் செல்லுங்கள்.
ஸ்டேப் 2: முகப்புப் பக்கத்தில்,  ‘CRP CLERKS-IX க்கு விண்ணப்பிக்க இங்கே’ என்பதை கிளிக் செய்யுங்கள்.( ஸ்க்ரோலிங் ஆகிக் கொண்டிருக்கும்)
ஸ்டேப் 3: ‘புதிய பதிவுக்கு  இங்கே ’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப் 4: கேட்கப்படும் தகவல்களை பொறுமையாய் நிரப்புங்கள்.
ஸ்டேப் 5: உங்கள் புகைப் படங்களை பதிவேற்றுங்கள்
ஸ்டேப் 6 : பணம் செலுத்தி இறுதியாய் சமர்ப்பித்து விடுங்கள்

கட்டணம்:  விண்ணப்பக் கட்டணமாக ரூ .600 செலுத்த வேண்டும்.ர்சர்வ்டு கேட்டகிரி தேர்வர்களுக்கு கட்டணம் ரூ .100 மட்டுமே

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வுகளில் 100 மதிப்பெண் அடிப்படையில் ஆங்கிலம், எண் திறன் மற்றும் பகுத்தறிவு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 100 கேள்விகள் கேட்கப்படுகின்றன.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ibps clerk syllabus ibps how to apply online ibps clerk exam pattern ibps exam examdate

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X