IBPS Mains Result 2019: ஐ.பி.பி.எஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வாணையம், 2018-ல் நடந்த மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை வெளியிட்டுள்ளது.
கிளர்க் பணியிடங்களுக்காக 2018-ல் மெயின் தேர்வெழுதியவர்கள் தங்களது முடிவை ibps.in என்ற தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
ஐ.பி.பி.எஸ் கிளர்க் மெயின் தேர்வு எழுதியவர்கள், இன்று முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரையில் தங்களது முடிவுகளை இணைய தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
இதற்கு பதிவெண்ணையும், பிறந்த தேதியையும் பிழையில்லாமல் குறிப்பிடுவது அவசியம்.
IBPS Mains Result 2019 - எவ்வாறு முடிவை தெரிந்துக் கொள்வது?
அதிகாரப்பூர்வ தளமான ibps.in -க்கு விசிட் செய்யவும்.
தளத்தின் முகப்புப் பக்கத்தில் இருக்கும், ’IBPS Clerk Mains result 2018’ என்பதை க்ளிக் செய்யவும்.
இப்போது புதிய பக்கம் திறக்கும். அதில் உங்களது பதிவெண்ணையும் பிறந்தத் தேதியையும் குறிப்பிடவும்.
இப்போது உங்களது IBPS Clerk Mains result 2018 திரையில் தோன்றும்.
சரிபார்த்து விட்டு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.