வேலை தேடும் பட்டதாரிகளே... ஐபிபிஎஸ் தேர்வு பற்றி உங்களுக்கு தெரியுமா?

இன்று இரவுக்குள்  அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் உங்களில் பெயர் மற்றும்  இதர  விவரங்களை பதவி செய்து

ஐபிபிஎஸ் தேர்வு : வங்கித் துறையில் பணிபுரிய வேண்டும் என்பதை கனவு மற்றும் லட்சியமாக கொண்டிருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஐபிபிஎஸ் தேர்வு:

வங்கி பணியில் சேர்வதற்கு நடத்தப்படும் தேர்வுகளில் முதன்மையானது இந்த ஐபிபிஎஸ் தேர்வு. நாளை (அக்டோபர் 13) முதல் இந்த தேர்வுகள் ஆரம்பமாகின்றன. 2018-ஆம் ஆண்டு இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் அட்மிட் கார்டை ஐபிபிஎஸ் இணையதளத்தில் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முதன்மைத் தேர்வு (Preliminary Exam) அக்டோபர் 13, 14, 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெறும். மெயின் தேர்வு (Main Exam) நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் அல்லது நவம்பரில் வெளியாகும்.

அதே போல் மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும். 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் நேர்முகத் தேர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 மதிப்பெண் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.  தேர்வு மொழி ஆங்கிலத்தில் நடைபெறும்.   தேர்வுக்கு விண்ணபித்து விட்டு  இதுவரை அட்மிட் கார்டை   டவுன்லோட் செய்யாதவர்கள்  இன்று இரவுக்குள்  அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் ibps.in உங்களில் பெயர் மற்றும்  இதர  விவரங்களை பதவி செய்து அட்மிர்ட் காரை பெற்றுக் கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close