/tamil-ie/media/media_files/uploads/2018/10/CAR-3.jpg)
பலரும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த ஐபிபிஎஸ் பி.ஓ 2018 தேர்வு முடிவுகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிருப்பவர்கள் ibps.in இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் ஐபிபிஎஸ் எனப்படும் அமைப்பு தேர்வுகளை நடத்தி வருகிறது. வங்கித்துறையில் பணி செய்ய விரும்புவர்கள் பலகட்ட தேர்வுக்கு பின்பு பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டிற்கான ஐபிபிஎஸ் பி. ஓ தேர்வு முடிவுகள் இன்று(30.10.18) வெளியாகியுள்ளன.
IBPS Result, Steps to check IBPS Bank PO Prelims Exam Result 2018 : தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது!
1. முதலில் ibps.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. பின்பு ‘IBPS PO Preliminary Exam Result’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
3. அதில், உங்களின் தேர்வு எண் மற்றும் ரோல் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.
4. இப்போது ஐபிபிஎஸ் பி.ஓ 2018 தேர்வின் ,முடிவுகள் தோன்றும்.
இதில் தேர்வாகும் நபர்கள், ஐபிபிஎஸ் பி.ஓ முதன்மை தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வு வரும் நவம்பர் 18ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அட்மிட் கார்டுகளை சம்பந்தப்பட்ட இணையளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவை வரும் நவம்பர் 3ஆம் தேதி இணையத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.