ஆர்.ஆர்.பி வங்கியில் மேலாளர் வேலை: ஐ.பி.பி.எஸ் அறிவிப்பு வெளியானது

ibps recruitment 2020 :மூத்த வங்கி மேலாளர், வங்கி மேலாளர், உதவி மேலாளர்  அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பண்கள் வரவேற்கப்படுகிறது.

2020, ibps rrb apply online, ibps recruitment 2020,
2020, ibps rrb apply online, ibps recruitment 2020,

RRB Recuirtment apply online:  நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கநிலை நீடித்து வரும் நிலையில், பிராந்திய ஊரக வங்கிகளில் (ஆர்ஆர்பி) குரூப் A மற்றும் குரூப் B வங்கிப் பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) வெளியிட்டது.

மூத்த வங்கி மேலாளர், வங்கி மேலாளர், உதவி மேலாளர்  அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பண்கள் வரவேற்கப்படுகிறது.

ஆர்வமுள்ள வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ibps.in இல் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:   

  • மூத்த வங்கி மேலாளர் – 21 முதல் 40 மிகாமல் இருக்க வேண்டும்;
  • வங்கி மேலாளர்-  32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • உதவி மேலாளர் – 20 மற்றும் 30 வயதுக்குட்பட்டவர்களாக  இருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் -18 மற்றும் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • இடஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

வின்னபிக்கப்பட்ட அனைத்து பணிகளுக்கும் வேட்பாளர்கள் குறைந்தபட்சம்  பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மூத்த மேலாளர் மற்றும் வங்கி மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள்  பட்டப்படிப்பைத் தண்டி, பொருத்தமான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் – ரூ .850; இடஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 175 வசூலிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் நாள்: ஜூலை 1 முதல் 27 வரை.

இந்த பணியிடங்களுக்கு முதனிலை, மெயின், நேர்காணல் முறைகளில் பணியாளர்களை தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ibps recruitment 2020 senior bank manager bank manager ibps office assistant

Next Story
ஜே.இ.இ தேர்வு எழுதாமல் சென்னை ஐஐடியில் பட்டம்: மகத்தான திட்டம் அறிமுகம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express