/indian-express-tamil/media/media_files/2025/07/01/ibps-bank-jobs-2025-07-01-14-26-13.jpg)
பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்கள் வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) வெளியிட்டு இருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நாட்டில் உள்ள பொத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை IBPS மேற்கொள்கிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது சிறப்பு அதிகாரிகள் (SPECIALIST OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 1007 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
I.T Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 203
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation படித்திருக்க வேண்டும்.
Agricultural Field Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 310
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture படித்திருக்க வேண்டும்.
Rajbhasha Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 78
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Hindi படித்திருக்க வேண்டும்.
Law Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 56
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor Degree in Law (LLB) படித்திருக்க வேண்டும். மற்றும் பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
HR/ Personnal Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate diploma in Personnel Management / Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law படித்திருக்க வேண்டும்.
Marketing Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 350
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MMS (Marketing)/ MBA (Marketing)/ PGDBA / PGDBM/ PGPM/ PGDM (Marketing) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
சம்பளம்: ரூ. 48480-2000/7-62480-2340/2-67160-2680/7-85920
தேர்வு செய்யப்படும் முறை:
இத முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 2024 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibps.in/ அல்லது https://ibpsreg.ibps.in/crpspxvjun25/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2025
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850. SC, ST, PWD பிரிவுகளுக்கு ரூ.175.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.