IBPS SO 2020 : சிறப்பு அதிகாரி கேடர் பதவிகளில் (ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் கேடர் போஸ்ட் ) பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான காமன் ஆட்சேர்ப்பு செயல்முறை (சிஆர்பி) தொடர்பான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in க்கு செல்ல வேண்டும்.
Advertisment
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை, இந்த மாதம் நவம்பர் 6-ம் தேதியில் தொடங்கி, நவம்பர் 26 ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். முதனிலைத் தேர்வு டிசம்பர் 28, 29 அன்று நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐபிபிஎஸ் பிஓ/எம்டி - க்கான ஆரம்ப தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளன.
Advertisment
Advertisements
ஐ.டி அதிகாரி (அளவுகோல் I), வேளாண் கள அலுவலர் (அளவுகோல் I), ராஜ்பஷா ஆதிகாரி (அளவுகோல் I), சட்ட அலுவலர் (அளவுகோல் I), மனிதவள / பணியாளர் அலுவலர் (அளவுகோல் I), சந்தைப்படுத்தல் அலுவலர் (அளவு I) போன்ற பணிகளுக்காக தேர்வு நடத்தப்படுகிறது.
IBPS SO 2020 தேர்வுக்கான முக்கிய நாட்கள்:
விண்ணப்ப செயல்முறை தொடங்கும் நாள் - நவம்பர் 6, 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி- நவம்பர் 26, 2019
முதனிலை ஆன்லைன் தேர்வு- டிசம்பர் 28 மற்றும் 29, 2019
பிரிலிம்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு: ஜனவரி 2020
முதன்மை ஆன்லைன் தேர்வு- ஜனவரி 25, 2020
முதன்மைத் தேர்வுக்கான அட்மிட் கார்டு: பிப்ரவரி 2020
தகுதி:
வேட்பாளர்களின் வயது - குறைந்தது 20 வயது மற்றும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
வேட்பாளர்கள் அந்தந்த பணிகளுக்கான தேவையான கல்வித் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
IBPS SO 2020 தேர்வு செயல்முறை
முதனிலைத் தேர்வு (பிரிலிமினரி), மற்றும் முதன்மைத் தேர்வு (மெயின்ஸ்) மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
IBPS SO 2020 க்கு விண்ணப்பிக்க வேண்டிய செயல்முறைகள்
ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்
IBPS SO 2020 நோட்டிபிகேஷன் கிளிக் செய்யுங்கள்
கேட்கப்படும் தேட்டாக்களை கவனமாய் செலுத்துங்கள்
அப்ப்ளிகேஷனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்