IBPS SO 2020 Application Process begins : 1,163 சிறப்பு அதிகாரி கேடர் பணிகளுக்கு (ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் கேடர் போஸ்ட் ) விண்ணப்பம் செய்வதற்கான ஆன்லைன் செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது.
ஐ.டி அதிகாரி (அளவுகோல் I), வேளாண் கள அலுவலர் (அளவுகோல் I), ராஜ்பஷா ஆதிகாரி (அளவுகோல் I), சட்ட அலுவலர் (அளவுகோல் I), மனிதவள / பணியாளர் அலுவலர் (அளவுகோல் I), சந்தைப்படுத்தல் அலுவலர் (அளவு I) போன்ற பணிகளுக்காக ஆர்வமுள்ள பயனர்கள் ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் .
இதற்கான முதனிலைத் தேர்வு, அடுத்த மாதம் டிசம்பர் 28 மற்றும் 29 அன்று நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில், இரண்டு மணி அவகாசத்தில், 150 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
IBPS SO 2020 தேர்வுக்கான முக்கிய நாட்கள்:
விண்ணப்ப செயல்முறை தொடங்கும் நாள் – நவம்பர் 6, 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி- நவம்பர் 26, 2019
முதனிலை ஆன்லைன் தேர்வு- டிசம்பர் 28 மற்றும் 29, 2019
பிரிலிம்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு: ஜனவரி 2020
முதன்மை ஆன்லைன் தேர்வு- ஜனவரி 25, 2020
முதன்மைத் தேர்வுக்கான அட்மிட் கார்டு: பிப்ரவரி 2020
தகுதி:
வேட்பாளர்களின் வயது – குறைந்தது 20 வயது மற்றும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேட்பாளர்கள் அந்தந்த பணிகளுக்கான தேவையான கல்வித் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
தேர்வுக் கட்டணம் : எஸ்.சி/எஸ்.டி/பிடபிள்யூபிடி பிரிவினருக்கு - ரூ.100, பற்ற பிரிவினருக்கு ரூ -600
IBPS SO 2020 க்கு விண்ணப்பம் செய்வது மிகவும் சுலபம்:
- ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்
- IBPS SO 2020 நோட்டிபிகேஷன் கிளிக் செய்யுங்கள்
- கேட்கப்படும் தேட்டாக்களை கவனமாய் செலுத்துங்கள்
- அப்ப்ளிகேஷனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.