வங்கி பணியில் 1,163 இடங்களுக்கு விண்ணப்பம் செய்து விட்டீர்களா ?

IBPS SO Exam Application : இதற்கான முதனிலைத் தேர்வு,  அடுத்த மாதம் டிசம்பர் 28 மற்றும் 29 அன்று நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBPS SO 2020 Application Process begins : 1,163 சிறப்பு அதிகாரி கேடர் பணிகளுக்கு    (ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் கேடர் போஸ்ட் ) விண்ணப்பம் செய்வதற்கான ஆன்லைன் செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது.

ஐ.டி அதிகாரி (அளவுகோல் I), வேளாண் கள அலுவலர் (அளவுகோல் I), ராஜ்பஷா ஆதிகாரி (அளவுகோல் I), சட்ட அலுவலர் (அளவுகோல் I), மனிதவள / பணியாளர் அலுவலர் (அளவுகோல் I), சந்தைப்படுத்தல் அலுவலர் (அளவு I) போன்ற  பணிகளுக்காக ஆர்வமுள்ள பயனர்கள் ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் .

இதற்கான முதனிலைத் தேர்வு,  அடுத்த மாதம் டிசம்பர் 28 மற்றும் 29 அன்று நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில், இரண்டு மணி அவகாசத்தில், 150 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

IBPS SO 2020 தேர்வுக்கான முக்கிய நாட்கள்:

விண்ணப்ப செயல்முறை தொடங்கும் நாள் – நவம்பர் 6, 2019

விண்ணப்பிக்க கடைசி தேதி- நவம்பர் 26, 2019

முதனிலை ஆன்லைன் தேர்வு- டிசம்பர் 28 மற்றும் 29, 2019

பிரிலிம்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு: ஜனவரி 2020

முதன்மை ஆன்லைன் தேர்வு- ஜனவரி 25, 2020

முதன்மைத் தேர்வுக்கான அட்மிட் கார்டு: பிப்ரவரி 2020

தகுதி:

வேட்பாளர்களின் வயது – குறைந்தது 20 வயது மற்றும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேட்பாளர்கள் அந்தந்த பணிகளுக்கான தேவையான கல்வித் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

தேர்வுக் கட்டணம் : எஸ்.சி/எஸ்.டி/பிடபிள்யூபிடி  பிரிவினருக்கு – ரூ.100, பற்ற பிரிவினருக்கு ரூ -600

IBPS SO 2020 க்கு விண்ணப்பம் செய்வது மிகவும் சுலபம்:   

  • ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்
  • IBPS SO 2020 நோட்டிபிகேஷன் கிளிக் செய்யுங்கள்
  • கேட்கப்படும் தேட்டாக்களை கவனமாய் செலுத்துங்கள்
  • அப்ப்ளிகேஷனை  பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ibps so exam online application last date ibps prelims exam pattern ibpsexam apply online

Next Story
CBSE Board Exams Date Sheet 2020 : 10, 12 சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை எப்போது ?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com