ICAI CA Results: சி.ஏ தேர்வு ரிசல்ட் வெளியீடு; செக் செய்வது எப்படி?

ICAI CA Results: சி.ஏ பவுண்டேசன் தேர்வு ரிசல்ட் வெளியீடு; ஆன்லைனில் செக் செய்வது எப்படி? தகுதி மதிப்பெண்கள் என்ன?

ICAI CA Results: சி.ஏ பவுண்டேசன் தேர்வு ரிசல்ட் வெளியீடு; ஆன்லைனில் செக் செய்வது எப்படி? தகுதி மதிப்பெண்கள் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cbse 12th results

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) சி.ஏ (CA) பவுண்டேசன் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. icai.nic.in மற்றும் icai.org இணையதளங்களில் ஜூன் 2024 அமர்வுத் தேர்வுக்கான சி.ஏ தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். ஜூன் 20, 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஜூன் சி.ஏ தேர்வை ஐ.சி.ஏ.ஐ நடத்தியது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

சி.ஏ பவுண்டேசன் தேர்வு முடிவைத் தெரிந்துக்கொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான icai.org அல்லது icai.nic.in என்ற இணையதளப் பக்கங்களில் தங்கள் பதிவு எண்கள் அல்லது கடவுச்சொல் மற்றும் ரோல் எண்களுடன் உள்நுழைய வேண்டும்.

ஒவ்வொரு தாளிலும் 40 மதிப்பெண்கள் மற்றும் நான்கு தாள்களின் மொத்தமாக 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்கள் சி.ஏ பவுண்டேசன் தேர்வில் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். சி.ஏ தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களைப் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு "டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி" என்ற தகுதி நிலை வழங்கப்படும்.

கடந்த ஆண்டு, 29.99 சதவீதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர், அவர்களில் 29.77 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் 30.19 சதவீதம் பேர் ஆண்கள். மொத்தம் 137153 பேர் (71966 ஆண்கள் மற்றும் 65187 பெண்கள்) தேர்வெழுதினர், அவர்களில் 41132 பேர் (21728 ஆண்கள் மற்றும் 19404 பெண்கள்) சி.ஏ பவுண்டேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Exam Result

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: