Advertisment

சென்னையில் உள்ள மத்திய மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னையில் உள்ள மத்திய அரசின் உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
CIBA Campus

சென்னையில் உள்ள மத்திய அரசின் உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவன வேலை வாய்ப்பு

மத்திய அரசின் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Junior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.F.Sc degree in Fish Nutrition/ Fish Physiology & Biochemistry/ Aquaculture/ Aquatic Animal Health Mangement/ Environmental Management/ Fish Biotechnology/ Microbiology அல்லது M.Sc in Biochemistry/ Microbiology/ Chemistry/ Environmental Sciences/ Zoology/ Marine Biology அல்லது M.Tech in Biotechnology/ Industrial Microbiology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 31,000

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : Syama.Dayal@icar.gov.in and/or syamadayal@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.11.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ciba.icar.gov.in/wp-content/uploads/2023/11/Notification-and-application-DBT-4001-534-Project.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment