ICAR Recruitment; இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் 641 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் 641 டெக்னீசியன் பணியிடங்கள்; பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ICAR recruitment 2021 641 Technician jobs: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் 641 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கீழ் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 641 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 10.01.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

டெக்னீசியன் (TECHNICIAN)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 641

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 10.01.2022 அன்று 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தளர்வு : SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ. 1000, SC/ST, பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு ரூ. 300

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது.

கணினி வழித் தேர்வு : இந்த தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். பொது அறிவு (General Knowledge), கணிதம் (Mathematics), அறிவியல் (Science), சமூக அறிவியல் (Social Science) ஆகிய நான்கு பிரிவுகளில் தலா 25 மதிப்பெண்களுக்கு என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம் 30 நிமிடம்.

வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இடம்பெறும். தேர்வில் தவறான வினாக்களுக்கு எதிர்க்குறி (Negative Mark) மதிப்பெண் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/74856//Instruction.html என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1118203919133825154477.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Icar recruitment 2021 641 technician jobs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com