ICF Apprentice eligibility, age limit, fee details: இந்திய ரயில்வேயின் பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை அப்ரென்டிஸ் (பணி பழகுநர்கள்) பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . இதற்கான விண்ணப்ப செயல்முறை, செப்டம்பர்-4ம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மொத்த எண்ணிக்கை: 990
யார் விண்ணபிக்கலாம்: இந்திய நாட்டினர் யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணபிக்கலாம்.
பொறியியல் / பட்டம் / டிப்ளோமா போன்ற உயர் தகுதிகள் கொண்ட மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
தேர்வு முறை: இந்த அப்ரென்டிஸ் பணிக்காக தனியாக எந்த தேர்வும், நேர்கானலும் நடத்தப்பட மாட்டாது. 10 ஆம் வகுப்பு தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். Medical Lab Technician பணிக்கு மட்டும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கல்வித்தகுதி : தேர்வர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : தேர்வர்களின் குறைந்தபட்ச வயது 15 வயதாக இருக்க வேண்டும், அதிகபட்ச வயது 24 ஆகவும் இருக்க வேண்டும்.
எஸ்சி/எஸ்டி பிரிவு தேர்வர்களுக்கு, உயர் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு கொடுக்கபடுகின்றன. ஓபிசி-என்சிஎல் பிரிவு வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், PwBD தேர்வர்களுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளன.
கட்டணம்: பொது வகை பிரிவு வகுப்பினர் ரூ .100 கட்டணம் செலுத்த வேண்டும்; எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி மற்றும் பெண் தேர்வர்கள் எந்த கட்டணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை.
மேலும், விபரங்களுக்கு http://pbicf.in/app2020/ என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil