Advertisment

IDBI Bank Jobs: ஐ.டி.பி.ஐ வங்கியில் 600 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

ஐ.டி.பி.ஐ வங்கி வேலை வாய்ப்பு; 600 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
IDBI Bank to continue as Indian private sector bank post strategic sale

ஐ.டி.பி.ஐ வங்கி வேலை வாய்ப்பு

ஐ.டி.பி.ஐ வங்கியில் 600 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisment

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐ.டி.பி.ஐ வங்கி, நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும். நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில் இளநிலை உதவி மேலாளர் மற்றும் வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.11.2024 ஆகும்.

Junior Assistant Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 500

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Agri Asset Officer (AAO)

காலியிடங்களின் எண்ணிக்கை: 100

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc/B Tech/B.E in Agriculture, Horticulture, Agriculture engineering, Fishery Science/Engineering, Animal Husbandry, Veterinary science, Forestry, Dairy Science/Technology, Food Science/technology, Pisciculture, Agro Forestry, Sericulture பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.10.2024 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ 6.14 – 6.50 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 60 வினாக்கள், கணிதம் (Quantitative Aptitude) – 40 வினாக்கள், ஆங்கிலம் (English Language) – 40 வினாக்கள், பொது அறிவு (General/ Economy/ Banking Awareness) – 60 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கு கூடுதலாக சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பதவிகளுக்கு https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 200, மற்றவர்களுக்கு ரூ. 1000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.idbibank.in/pdf/careers/JAM-advertisement-2025-26.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

IDBI Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment