IDBI Bank Jobs; ஐடிபிஐ வங்கியில் அடுத்த வேலைவாய்ப்பு; 650 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்

IDBI recruitment 650 assistant manager vacancies online application starts: ஐடிபிஐ வங்கியில் 650 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; பட்டப்படிப்பு தேர்ச்சி போதும்; ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பம்

ஐடிபிஐ வங்கியில் 650 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கி, நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும். நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பதவிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 22.08.2021 ஆகும்.

மொத்த காலியிடங்கள்: 650

வயதுத் தகுதி

01-07-2021 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD  பிரிவினர் 55% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

விண்ணப்பக் கட்டணம்

SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 200

மற்றவர்களுக்கு ரூ. 1000

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22-08-2021

ஆன்லைன் தேர்வு : 04-09-2021

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிகளுக்கு https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள். ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 4 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வில்

திறனறிதல் (Reasoning) – 60 வினாக்கள்

கணிதம் (Quantitative Aptitude) – 40 வினாக்கள்

ஆங்கிலம் (English Language) – 40 வினாக்கள்

பொது அறிவு (General/Economy/Banking Awareness) – 60 வினாக்கள்

என 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படும். இந்த காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், PGDBF எனும் ஓர் ஆண்டு டிப்ளமோ பயிற்சியை முடித்த பின்னர், வங்கிகளில் பணியிடங்கள் வழங்கப்படும்.

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கான பயிற்சியின் போது முதல் 9 மாதங்களுக்கு ரூ.2500 உதவித் தொகை வழங்கப்படும்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ. 10000 வழங்கப்படும்.

பயிற்சியை முழுமையாக முடித்த பின்னர் ரூ. 36000 அடிப்படை சம்பளத்தில், வங்கிகளில் பணியிடங்கள் வழங்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Idbi recruitment 650 assistant manager vacancies online application starts

Next Story
தமிழ்நாடு TANCET MBA/MCA படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆரம்பம்; கடைசி தேதி ஆகஸ்ட் 31
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com