Advertisment

IDBI Recruitment; பட்டப்படிப்பு தகுதி; ஐடிபிஐ வங்கியில் 920 எக்ஸிக்யூடிவ் பணியிடங்கள்

IDBI recruitment 920 Executives vacancies online applications starts: ஐடிபிஐ வங்கியில் 920 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; பட்டப்படிப்பு தேர்ச்சி போதும்; ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பம்

author-image
WebDesk
New Update
IDBI Bank Jobs; ஐடிபிஐ வங்கியில் அடுத்த வேலைவாய்ப்பு; 650 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்

ஐடிபிஐ வங்கியில் 920 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisment

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கி, நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும். நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில் எக்ஸிக்யூடிவ் (Executive) பதவிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 18.08.2021 ஆகும்.

மொத்த காலியிடங்கள்: 920

வயதுத் தகுதி

01-07-2021 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD  பிரிவினர் 50% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

விண்ணப்பக் கட்டணம்

SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 200

மற்றவர்களுக்கு ரூ. 1000

சம்பளம்

முதல் ஆண்டில் மாதத்திற்கு ரூ. 29,000

இரண்டாம் ஆண்டில் மாதத்திற்கு ரூ. 31,000

மூன்றாம் ஆண்டில் மாதத்திற்கு ரூ. 34,000

மூன்று ஆண்டுகளுக்கு தேவை மற்றும் தகுதிக்கேற்ப ஐடிபிஐ வங்கி கிளைகளில் அசிஸ்டெண்ட் மேனேஜராக பணியமர்த்தப்படுவீர்கள்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18-08-2021

ஆன்லைன் தேர்வு : 05-09-2021

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிகளுக்கு https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள். ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning), கணிதம் (Quantitative Aptitude) மற்றும் ஆங்கில (English Language) பகுதியில் இருந்து தலா 50 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Bank News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment