Advertisment

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022 ஆகும்.

இதையும் படியுங்கள்: IBPS SO 2022; வங்கி வேலை; 710 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Junior Research Fellowships

காலியிடங்களின் எண்ணிக்கை – 60

(Physical Sciences, Chemical Sciences, Engineering Sciences)

கல்வித் தகுதி : B.E./ B.Tech./ B.Sc. Engg./ B.Sc. / M.Sc/ M.E/ M.Tech படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ 21,000 – 40,000

வயது வரம்பு : இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு 04.12.2022 அன்று நடைபெறும். நேர்முகத் தேர்வு 05.12.2022 அன்று நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.igcar.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Assistant Personnel Officer Recruitment Section Indira Gandhi Centre for Atomic Research Kancheepuram District Kalpakkam – 603 102. Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.igcar.gov.in/recruit/JRF_Adv01_2022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment