இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) ஜனவரி 2023 மாணவர் சேர்க்கை சுழற்சியில் பத்திரிகை துறையில் மூன்று சிறப்பு முதுகலை படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த படிப்புகள் திறந்த மற்றும் தொலைதூர முறைகள் மூலம் வழங்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள்: UPSC Exam: மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பகிர்வு, சிறுசேமிப்பின் தாக்கங்கள்… முக்கிய டாபிக்ஸ் இங்கே!
டெவலப்மென்ட் ஜர்னலிசத்தில் எம்.ஏ., ஜர்னலிசம் மற்றும் எலக்ட்ரானிக் மீடியாவில் எம்.ஏ, ஜர்னலிசம் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் எம்.ஏ & விளம்பரம் மற்றும் ஒருங்கிணைந்த தகவல்தொடர்புகளில் முதுகலை டிப்ளமோ ஆகிய மூன்று சிறப்பு முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படிப்புகளுக்கான சேர்க்கை ஜனவரி 2023 இல் தொடங்குகிறது.
IGNOU இந்த படிப்புகளை லேட்ரல் எண்ட்ரி விருப்பங்களில் நெகிழ்வுத்தன்மையுடன் வழங்குகிறது, மேலும் கற்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் படிப்புகளை தொடரலாம். வெளியீட்டின் படி, படிப்புகள் ஊடகத் துறையில் தற்போதைய போக்குகளைப் பிரதிபலிக்கின்றன மற்றும் குறிப்பிட்ட திறன் தொகுப்புகளைப் பெற கற்பவர்களுக்கு உதவுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil