scorecardresearch

IISc Jobs: இந்திய அறிவியல் நிறுவன வேலை வாய்ப்பு; 76 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

இந்திய அறிவியல் நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 76 உதவியாளர் பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

IISc Jobs: இந்திய அறிவியல் நிறுவன வேலை வாய்ப்பு; 76 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 76 உதவியாளர் காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2023

Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 76

இதையும் படியுங்கள்: ISRO Jobs: இஸ்ரோ வேலை வாய்ப்பு; 526 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது தகுதி: 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 21,700 – 69,100

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.digialm.com/EForms/configuredHtml/956/80596/Registration.html என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.01.2023

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 450, SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50

மேலும் விவரங்களுக்கு https://iisc.ac.in/wp-content/uploads/2022/12/Notification-Admin-Assistant.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Iisc recruitment 2022 for 76 assistants posts apply online