IIT chennai IITMAA offer masterclass series for students: சென்னை ஐ.ஐ.டி, கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் சங்கம், இந்தியர்களுக்கு குறிப்பாக மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்காக 'மாஸ்டர் கிளாஸ்' எனும் கல்வித்தொடரை இலவசமாக வழங்கி வருகிறது. சகாப்தம். முன்னாள் மாணவர் சங்கத்தாள் ஆண்டு தோறும் நடத்தப்படும் ‘சங்கம் 2020’ எனும் தொழிநுட்ப விழாவின் கீழ் இந்த வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவரும், சங்கம் 2020 இன் ஒருங்கிணைப்பாளருமான கிருஷ்ணன் நாராயணன் கூறுகையில், “ கொரோனா போன்ற ஒரு பெருந்தொற்று காலத்தில், வாழ்க்கை மற்றும் மனிதம் குறித்த புதிய கண்ணோட்டங்கள் தேவைப்படுகிறது. நோய்த் தொற்று நம் அன்றாட வாழ்க்கையை ஆழமாக பாதித்துள்ளது. இந்த சவால்களை எதிர் கொள்வதற்கும், முன்னேறி செல்வதற்குமான திறன்களை இந்த வகுப்புகள் நமக்குக் கற்பிக்கும் ” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் வகையில், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ‘ஐ.ஐ.டி.எம் கோவிட் கேம்’ எனும் டிஜிட்டல் விளையாட்டை சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய பிராந்திய மொழிகளிலும் இந்த விளையாட்டு பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கிறது .