இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னையில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் அசிஸ்டெண்ட், ஜூனியர் இன்ஜினியர், செவிலியர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
இந்திய தொழில்நுட்ப கழகம் எனப்படும் சென்னை ஐஐடியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியம். விண்ணப்பிக்க கடைசி தேதி 23-08-2021 ஆகும்.
இளநிலை உதவியாளர் (Junior Assistant)
மொத்த காலியிடங்கள் – 30
வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior Technician)
மொத்த காலியிடங்கள் – 41
வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 3 வருட டிப்ளோமா (Diploma) அல்லது பி.எஸ்.சி (B.Sc.) அல்லது ஐடிஐ படிப்புகளில் குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, 5 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.
இதில் சிவில் (Civil) -5, வேதியியல் (Chemistry) - 3, மெக்கானிக்கல் (Mechanical) -12, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் (ECE/E&I/EE) – 13, எலக்ட்ரிக்கல் (Electrical) – 4, இயற்பியல் (Physics) -2, உயிரியல் (Biology / Life Science/ Biotechnology / Biomedical) – 2 என காலியிடங்கள் உள்ளன. அந்த பிரிவுக்கு ஏற்ற கல்வித் தகுதி உடையவர்கள் அந்தந்த பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இளநிலை கண்காணிப்பாளர் (Junior Superintendent)
மொத்த காலியிடங்கள் – 10
வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்று 6 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.
செவிலியர் (Staff Nurse)
மொத்த காலியிடங்கள் – 03
வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.எஸ்.சி நர்சிங் (B.Sc. in Nursing) -இல் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட முன் அனுபவம் அவசியம். அல்லது 3 வருட டிப்ளோமா நர்சிங்-இல் குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, 5 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.
உதவி பாதுகாப்பு அலுவலர் (Assistant Security Officer)
மொத்த காலியிடங்கள் – 03
வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று ராணுவம் அல்லது காவல்துறை பணிகளில் 6 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
இளநிலை பொறியாளர் (Junior Engineer)
மொத்த காலியிடங்கள் – 01
வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.இ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (Electrical Engineering) -இல் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட முன் அனுபவம் அவசியம். அல்லது 3 வருட டிப்ளோமா எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் -இல் குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, 5 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.
இளநிலை நூலக உதவியாளர் (Junior Library Technician)
மொத்த காலியிடங்கள் – 04
வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் M.Lib.Sc/M.L.I.S படித்திருக்க வேண்டும்.
வயது சலுகை: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC-NCL பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwD /Ex-Servicemen பிரிவுகளுக்கு அரசு விதிகளின் படியும் வயது தளர்வு உண்டு.
தகுதியுள்ளவர்கள், கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று போன்ற தேவையான பிற ஆவணங்களுடன் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் – ரூ. 300, ஆனால் SC/ST/PwD/பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.