இந்தியாவில் இருக்கும் 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) படிக்கும் மாணவர்களில் கடந்த ஐந்தாண்டில் மட்டும் 50 பேர் தற்கொலைக செய்துள்ளனர். ஐ.ஐ.டி-குவஹாத்தியில் மட்டும் இந்த தற்கொலை எண்ணிக்கை 14 என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் என்.கே பிரேமச்சந்திரன் நாடளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலில் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இந்த தகவலை வழங்கினார்.
சென்னை ஐ.ஐ.டியில் அண்மையில் பாத்திமா லத்தீப் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் இந்த தகவல்கள் குறிப்பிடத்தக்கவையாக கருதப்படுகிறது.
பதிலில், லத்தீப்பின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தக் கோரி பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாகவும் போக்ரியால் தனது பதிலில் தெரிவித்தார்.
" இந்த சம்பவம் சென்னை ஐஐடி விடுதி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட உடனேயே, போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டதாகவும், காவல்துறையினர் விடுதி அறையை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து விசாரணைகளைத் தொடங்கி விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு தமிழக காவல்துறை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி சென்னை நிர்வாகம் காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைக்கிறது, ” மத்திய அமைச்சர் பதிலில் பாத்திமா லத்தீப் பற்றிய குறிப்புகள் இருந்தன.
அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, ஐ.ஐ.டி-மெட்ராஸ் ஐ.ஐ.டி-பம்பாய் ஆகியவையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
20 இந்திய மேலாண்மை கழகங்களில் (ஐ.ஐ.எம்) உயர்க் கல்லூரிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 மாணவர் தற்கொலைகளை கூட்டாக கண்டன.