/indian-express-tamil/media/media_files/8w4HQ7x5rzufHg6mhsec.jpg)
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IIT) இறுதிச் சுற்று இட ஒதுக்கீட்டில், ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை சில முன்னணி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக இருப்பதாக கூட்டு அமலாக்கக் குழு (JIC) அறிக்கை வெளிப்படுத்துகிறது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 23 ஐ.ஐ.டி.,களில் அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்கள் 18,160 ஆக இருந்தாலும், உண்மையில் ஒதுக்கப்பட்ட இடங்கள் 18,188 ஆகும். அதாவது 28 இடங்கள் அதிகமாகும். பல ஐ.ஐ.டி.,களில் இந்த முரண்பாடு தெளிவாகத் தெரிகிறது, அங்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கிடைக்கக்கூடிய திறனை விட அதிகமாக உள்ளன.
உதாரணமாக, ஐ.ஐ.டி பாம்பே (IIT Bombay) அதன் அனுமதிக்கப்பட்ட 1,360 மொத்த இட திறனில் 1,364 இடங்களை ஒதுக்கியது, அதே நேரத்தில் ஐ.ஐ.டி டெல்லியில் (IIT Delhi) 1,239 இடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1,241 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதேபோல், ஐ.ஐ.டி கரக்பூரில் அனுமதிக்கப்பட்ட 1919 இடங்களில் 1923 மாணவர்களும், ஐ.ஐ.டி ஹைதராபாத்தில் மொத்தம் 630 மாணவர்களில் 631 மாணவர்களும், தன்பாத்தில் உள்ள ஐ.ஐ.டி (ஐஎஸ்எம்) மொத்தம் 1,210 இடங்களில் 1,213 மாணவர்களும், ஐ.ஐ.டி சென்னையில் மொத்தம் 1,121 இடங்களில் 1,124 மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். ஐ.ஐ.டி கான்பூர், அனுமதிக்கப்பட்ட 1210 இடங்களுக்குப் பதிலாக ஐந்து மாணவர்களை (1215) கூடுதலாகச் சேர்த்தது.
மறுபுறம், வாரணாசியில் அனுமதிக்கப்பட்ட 1589 இடங்களுக்கு பதிலாக 1588 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
பல ஆண்டுகளாக ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது நிகழ்கிறது. கடந்த ஆண்டு, மொத்தம் 17,760 இடங்கள் வழங்கப்பட்டன, அவற்றில் 17,695 இடங்கள் நிரப்பப்பட்டன. சேர்க்கை முந்தைய ஆண்டின் 17,385 இடங்களை விட கிட்டத்தட்ட 375 அதிகரித்துள்ளது. உண்மையில், ஐ.ஐ.டி.,களில் ஒரு முறை மட்டுமே இடங்கள் காலியாக விடப்படவில்லை, அது 2019 ஆம் ஆண்டாகும்.
இந்த போக்கு கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தின் (JoSAA) திரும்பப் பெறுதல்களை சமநிலைப்படுத்தி, இடங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் நடைமுறையை பிரதிபலிக்கிறது, ஆனால் இது சிறந்த பொறியியல் நிறுவனங்களுக்குள் திறன் மேலாண்மை குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது.
இதற்கிடையில், இந்த ஆண்டு பிப்ரவரியில் பட்ஜெட்டை அறிவித்த அரசாங்கம், மேலும் 6,500 மாணவர்களுக்கு கல்வி வழங்கும் வகையில் பாலக்காடு, தார்வாட், ஜம்மு, பிலாய் மற்றும் திருப்பதி ஆகிய ஐந்து மூன்றாம் தலைமுறை ஐ.ஐ.டி.,களில் (2014 க்குப் பிறகு அமைக்கப்பட்டவை) உள்கட்டமைப்பை உருவாக்குவதாகவும் கூறியது. இந்த இடங்கள் ஐந்து ஆண்டுகளில் பல கட்டங்களாக சேர்க்கப்படும், மேலும் முக்கியமாக இளங்கலை அல்லது பி.டெக் மட்டத்தில் இருக்கும்.
சமீபத்திய தரவுகளின்படி, பெண்களின் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் ஓரளவு மேம்பட்டுள்ளது, மொத்த ஒதுக்கீட்டில் 20.15 சதவீதமாக 3,664 மாணவிகள் இடங்களைப் பெற்றுள்ளனர். ஐ.ஐ.டி திருப்பதி (21.57%), ஐ.ஐ.டி ரூர்க்கி (20.50%), மற்றும் ஐ.ஐ.டி சென்னை (21.09%) போன்ற நிறுவனங்கள் தேசிய சராசரியை விட அதிக பெண் பங்கேற்பைப் பதிவு செய்துள்ளன.
ஜே.ஐ.சி 2025 அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஐ.ஐ.டி.,களில் மொத்த இருக்கை திறன் 18,160 ஆகும், இதில் 3,632 பெண்களின் (சூப்பர்நியூமரரி) இடங்கள் அடங்கும். இறுதி (ஆறாவது) சுற்றில், ஒன்பது சூப்பர்நியூமரரி டி.எஸ் இடங்கள், 11 சூப்பர்நியூமரரி வெளிநாட்டினர்/ ஓ.சி.ஐ/ பி.ஐ.ஓ (எஃப்) இடங்கள் மற்றும் 12 சூப்பர்நியூமரரி குறைந்தபட்ச கட்-ஆஃப் இடங்கள் உட்பட 18,188 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கூடுதலாக, 96 ஓ.சி.ஐ/ பி.ஐ.ஓ (ஐ) மாணவர்கள் (இந்திய நாட்டினராகக் கருதப்படுகிறார்கள்) சேர்க்கை பெற்றனர்.
JoSAA 2025-க்கு மொத்தம் 2,58,765 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்தனர். அவர்கள் மொத்தமாக 3,33,98,917 சாய்ஸ்களை நிரப்பினர். அவர்களில், 51,216 பேர் ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2025 தேர்வில் தகுதி பெற்றனர் மற்றும் 73,28,847 சாய்ஸ்களை நிரப்பினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.