Advertisment

வேலைவாய்ப்பு சார்ந்த ஆன்லைன் படிப்புகள்: ஐ.ஐ.டி மெட்ராஸ்- தொழில் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

ஸ்வயம் பிளஸ் என்ற திட்டம் கல்வி அமைச்சகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் இணைந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
iit madras

ஸ்வயம் பிளஸில் வேலைவாய்ப்பை மையப்படுத்திய படிப்புகளை வழங்குவதற்கு ஐஐடி மெட்ராஸ் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. திறன் மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட ஆன்லைன் படிப்புகள் மற்றும் இன்டர்ன்ஷிப்களை வழங்குவதற்காக பல துறைகளில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Advertisment

இதன் மூலம் ஸ்வயம் பிளஸில் உள்ள மொத்த தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தகவல் தொழில்நுட்பம், சமூக அறிவியல், வங்கி மற்றும் நிதி, மென் திறன்கள், இசை, மேலாண்மை, உணவு அறிவியல், இந்திய அறிவு அமைப்புகள் உள்ளிடவற்றை  கொண்டுள்ளது.  இது தொடங்கப்பட்டதில் இருந்து, 75,000 க்கும் மேற்பட்டவர்கள் கற்றுத் தேர்ந்துள்ளனர். 165 க்கும் மேற்பட்ட படிப்புகளில் பயனடைந்துள்ளனர்.  

ஆங்கிலத்தில் படிக்க:  IIT Madras collaborates with industry partners to offer employability focused programmes on Swayam Plus

ஸ்வயம் பிளஸ் என்ற திட்டம் கல்வி அமைச்சகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் இணைந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஸ்வயம் பிளஸ் திட்டத்தில்  manufacturing, energy, ணினி அறிவியல் மற்றும் பொறியியல்/IT/ITES, மேலாண்மை ஆய்வுகள், ஆசிரியர் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, சமூக அறிவியல், இந்திய அறிவு அமைப்புகள்,  மீடியா மற்றும் தகவல் தொடர்பு போன்ற துறைகளில் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment