சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி- மெட்ராஸ்) ஸ்காலர்ஷிப் நிதிக்கு 50 லட்சத்தை நன்கொடையாக வழங்குவதாக சென்னை ஐ.ஐ.டி-யின் 1972 ஆம் ஆண்டின் வகுப்பைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அறிவித்துள்ளனர். அவர்களின் பொன்விழா ரீயூனியன் நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஸ்காலர்ஷிப் நிதிக்கு நன்கொடை அளிப்பதோடு, பார்கின்சன் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்க இந்த நிறுவனத்தில் 'பார்கின்சன் தெரபியூட்டிக்ஸ் லேப்' உருவாக்குவதற்கு நிதியுதவி அளிப்போம் என்றும் முன்னாள் மாணவர்கள் குழு அறிவித்துள்ளது. "உயிரணுக்களின் இழப்பால் பார்கின்சன் நோய்க்கு வழிவகுக்கும் 'பாசல் கேங்க்லியா' ('Basal Ganglia' (BG)) எனப்படும் மூளைப் பகுதியின் கணக்கீட்டு மாதிரியை உருவாக்க, இந்த ஆய்வகம், இன்ஸ்டிடியூட் பயோடெக்னாலஜி துறைகளின் கணினி நரம்பியல் ஆய்வகத்தின் (CNS லேப்) ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்,” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: UPSC Exam: மக்கள்தொகை சீனா- இந்தியா, புற்றுநோய், ASER 2022 அறிக்கை… முக்கிய டாபிக்ஸ் இங்கே!
CNS ஆய்வகத்தின் பார்கின்சன் நோய் பற்றிய ஆராய்ச்சியில், பாசல் கேங்க்லியா மற்றும் பார்கின்சன் நோய்க்கான ஆராய்ச்சி, பார்கின்சன் நோய்க்கான மாதிரி அடிப்படையிலான மருத்துவ பயன்பாடுகள், பார்கின்சன் நோய்க்கான மருந்துகளான 'எல்டோபா' போன்றவற்றின் செயல்பாட்டிற்கான சிமுலேட்டர்கள், பார்கின்சன் நோய்க்கான ஆழ்ந்த மூளை தூண்டுதல், பார்கின்சன் நோய்க்கான அமைப்பு மற்றும் அளவு கண்டறியும் ஆய்வு ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டம் பேராசிரியர் வி ஸ்ரீனிவாச சக்ரவர்த்தி, பயோடெக்னாலஜி துறை, ஐ.ஐ.டி மெட்ராஸ், பூபத்தில் உள்ள கம்ப்யூட்டேஷனல் நியூரோ சயின்ஸ் (சி.என்.எஸ் லேப்) ஆய்வகத்தின் தலைவர் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் பயோடெக்னாலஜி துறையின் ஜோதி மேத்தா ஸ்கூல் ஆஃப் பயோ சயின்சஸ் ஆகியோரால் நிர்வகிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil