Advertisment

கூகுளின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக பிரபாகர் ராகவன் நியமனம்; சென்னை ஐ.ஐ.டி முன்னாள் மாணவர்

கூகுள் தனது புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக பிரபாகர் ராகவனை நியமித்துள்ளது; யார் இந்த பிரபாகர் ராகவன்? கல்வித் தகுதி, முந்தைய பணிநிலை உள்ளிட்ட முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
prabhakar Raghavan

கூகுள் தனது புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக பிரபாகர் ராகவனை நியமித்துள்ளது. பிரபாகர் ராகவன் இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்தார் மேலும் கூகுள் தேடல், அசிஸ்டெண்ட், ஜியோ, விளம்பரங்கள், வர்த்தகம் மற்றும் பேமெண்ட்ஸ் தயாரிப்புகளுக்குப் பொறுப்பாக இருந்தார். பிரபாகர் ராகவனின் பதவியை இப்போது நிக் ஃபாக்ஸ் எடுத்துக் கொள்வார் என்று தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அக்டோபர் 17 அன்று ஒரு உள் குறிப்பில் அறிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: IIT-Madras alumnus Prabhakar Raghavan is Google’s chief technologist

போட்டி மற்றும் பயனர் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக கூகுள் அதன் முக்கிய வணிகக் குழுவை மறுசீரமைக்கத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த நியமனம் நடந்துள்ளது.

பிரபாகர் ராகவனின் கல்வித் தகுதி

பிரபாகர் ராகவன் 1981 இல் சென்னை, இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி சென்னை) மின் பொறியியல் பட்டம் பெற்றார், 1982 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் (MS) பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, 1986 ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 

டாக்டர் பிரபாகர் ராகவன் பல்வேறு மரியாதைகள் மற்றும் விருதுகளைப் பெற்றவர். பிரபாகர் ராகவன் அமெரிக்க நேஷனல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் உறுப்பினராக உள்ளார். இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க சி.எஸ் (CS) முன்னாள் மாணவர் விருது மற்றும் ஐ.இ.இ.இ (IEEE) இன் ஃபெலோ மற்றும் ஏ.சி.எம் (ACM) இன் ஃபெலோ என்று பெயரிடப்பட்டது ஆகியவை அவரது மற்ற மரியாதைகளில் அடங்கும்.

கூகுளில் சேருவதற்கு முன், டாக்டர் பிரபாகர் ராகவன் யாகூ (Yahoo) லேப்ஸை நிறுவி வழிநடத்தினார்!. யாகூ லேப்ஸில், அவர் தேடல் மற்றும் விளம்பர தரவரிசை, அத்துடன் விளம்பர சந்தை வடிவமைப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பானவராக இருந்தார். பின்னர் அவர் நிறுவனத்தின் தலைமை வியூக அதிகாரியாக பணியாற்றினார். யாகூவில் அவர் பணியாற்றுவதற்கு முன்பு, அவர் வெரிட்டியில் சி.டி.ஓ (CTO) ஆக பணியாற்றினார் மற்றும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார், அல்காரிதம்கள், தரவுச் செயலாக்கம் மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

2012ல் தான் கூகுளில் தனது பயணத்தை தொடங்கினார். கூகுள் கிளவுட் மற்றும் கூகுள் ஆப்ஸில் ஒரு குழுவை வழிநடத்தி, ஜிமெயில் மற்றும் கூகுள் டிரைவ் போன்ற உள் தயாரிப்புகளை நிர்வகித்து வந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Google Iit Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment