சென்னை ஐ.ஐ.டி, விரைவில் பயோ மிமிக்ரி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது.
சென்னை ஐ.ஐ.டி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "பயோமிமிக்ரி என்பது உயிரியல் மற்றும் பொறியியல் பாடத் திட்டங்களின் இணைப்பாகும். இதனைக் கற்க பொறியாளராகவோ உயிரியியலாளராகவோ இருக்கத் தேவையில்லை. இயற்கையின் படைப்புகள் மீது எண்ணற்ற ஆர்வம் இருந்தாலே போதும். ஒரு தாமரை இதழைப் பார்த்து, எப்படி இது எப்போதும் தூய்மையாகவே இருக்கிறது?' என்று கேட்கத் தெரிந்தால் போதும்" தெரிவித்தது.
ஒரு உயிரினத்திலிருந்து பல தத்துவங்களையும், பயன்பாடுகளையும் நம்மால் உருவாக்க முடியுமென்றால், பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ளன.பல கோடி ஆண்டுகளாக இந்த பூமியில் அவை எண்ணற்ற உத்திகளை உருவாக்கியுள்ளன. நம் உலகத்திற்கான தீர்வுகளை வடிவமைக்கவும் கட்டமைக்கவும் இயற்கை உத்திகளை பயன்படுத்தலாம் என்று சென்னை ஐ.ஐ.டி தெரிவித்தது.
சென்னை ஐ.ஐ.டி-யில் தற்போது பல்வேறு துறைகளில் பயின்று வரும் 25 மானவர்ர்களைக் கொண்டு இந்த புதிய பாடநெறி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயோ மிமிக்ரியில் ஆர்வம் கொண்ட நபர்களை கொண்ட குழுவையும் சென்னை ஐஐடி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவது என ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil