Advertisment

நிதிசார் கல்வியை ஊக்குவிக்க புதிய படிப்பு: ஐஐடி-மெட்ராஸ் அறிமுகம்

இந்த படிப்பு வங்கி மற்றும் நிதி, டிஜிட்டல் வங்கி, பரஸ்பர நிதிகள் மற்றும் பலவற்றைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிதிசார் கல்வியை ஊக்குவிக்க புதிய படிப்பு: ஐஐடி-மெட்ராஸ் அறிமுகம்

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ்' (ஐஐடி-மெட்ராஸ்) டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமி, இன்ஃபேக்ட் ப்ரோவுடன் இணைந்து ‘பிரீமியர் பேங்கர்’  எனப்படும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தப் படிப்பில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இரண்டாம் அல்லது மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

வங்கி அல்லது நிதிசார் சேவைத் துறையில் முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். ஆனால் முன் அனுபவம் இருக்க வேண்டியது கட்டாயமில்லை.

இந்த படிப்பு வங்கி மற்றும் நிதி, டிஜிட்டல் வங்கி, பரஸ்பர நிதிகள் மற்றும் பலவற்றைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நிதி ஆரோக்கியத்தை முன்கூட்டியே கண்காணிக்கவும் வங்கி மற்றும் நிதிசார்ந்த முடிவுகளை எடுப்பதற்கான ஆலோசனைகள் அடங்கிய தொகுப்பும் பயிற்சிகளும் உள்ளடக்கியதாக இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிலை-1 முடித்த பிறகு, மாணவர்கள் ஆறு மாதங்களுக்கு வங்கிச் சூழலில் பணிபுரியுமாறு அறிவுறுத்தப்படுவார்கள். இதை வெற்றிகரமாக முடித்தவுடன், விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸின் கல்வி மையத்திலிருந்து சான்றிதழைப் பெறுவார்கள்.

பதிவு செய்வது எப்படி:

படி 1: InfactPro இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் - infactpro.com.

படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள 'பாடங்கள்' என்பதன் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'IIT சான்றிதழ்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: 'புரோகிராம் இன் பிரீமியர் பேங்கர்' என்பதற்கான பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 4: 'இப்போதே பதிவுசெய்க' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5: பதிவு செய்ய அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, பக்கத்தின் இறுதியில் உருட்டவும்.

படி 6: அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, ஆவணங்களைப் பதிவேற்றி, 'பதிவு செய்யவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்த திட்டம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் மற்றும் 250 மணிநேர பாடங்களைக் கொண்டிருக்கும். இந்தக் கல்விக்கான கட்டணம் ரூ 59,000 (வரி உட்பட). ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் IIT-Madras அதிகாரப்பூர்வ இணையதளம் — iitm.ac.in — அல்லது InfactPro இன் இணையதளம் — infactpro.com — ஆகியவற்றில் மேலும் விவரங்களைப் பெறலாம். இந்த இணையதங்களில் பதிவும் செய்யலாம்.

TNPSC Group 2: குரூப் 2 விண்ணப்பித்து விட்டீர்களா… தேர்வு முறை எப்படி?

இந்த பாடத்திட்டத்தை ஐஐடி மெட்ராஸின் டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமி (டி.எஸ்.ஏ.) நடத்துகிறது. இது 2018 முதல் 25 க்கும் மேற்பட்ட படிப்புகளுடன் ஆன்லைன் பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸின் நிறுவனர் சி.இ.ஓ. லக்ஷ்மி நாராயணன் மற்றும் ஐ.ஐ.டி. மெட்ராஸின் முன்னாள் இயக்குநரும், NPTEL மூலம் இந்தியாவில் டிஜிட்டல் ஆன்லைன் கற்றல் தொடங்கியவறுமான பேராசரியர் எம்.எஸ்.அனந்த் ஆகியோர் டி.எஸ்.ஏ தலைவர்கள் ஆவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment