/indian-express-tamil/media/media_files/RZOv6CRakYMMSx7zrxeT.jpg)
ஐ.ஐ.டி சென்னை உடற்கூறியல் ஆய்வகத்தின் சில வசதிகளை எடுத்துரைத்தது (புகைப்படம்: ஐ.ஐ.டி சென்னை)
பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் (IIT Madras) இணைந்து சென்னை ஐ.ஐ.டி.,யில் உடற்கூறியல் ஆய்வகத்திற்கு நிதியளித்துள்ளன. மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நிறுவப்பட்ட இந்த வசதி ரூ.16.5 கோடி மானியத்துடன் நிதியளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: IIT Madras gets Rs 16.5 crore grant from Power Finance Corporation for anatomy lab
அதன் செய்திக்குறிப்பில், ஐ.ஐ.டி சென்னை உடற்கூறியல் ஆய்வகத்தின் சில வசதிகளை எடுத்துரைத்தது. வெளியீட்டின் படி, ஆய்வகம் பயனுள்ள கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியலில் புதுமையான பி.எஸ் (BS) பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு உதவும்.
ஏற்கனவே உலர் உடற்கூறியல் ஆய்வகத்தை நிறுவியுள்ள ஐ.ஐ.டி சென்னை, தற்போது ஒரு மேம்பட்ட ஆய்வகத்தை அமைத்துள்ளதன் மூலம் மாணவர்களுக்கு துறையில் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
ஐ.ஐ.டி சென்னையின் இயக்குநர், பேராசிரியர் வி காமகோடி, “பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனால் சாத்தியமாக்கப்பட்ட இந்த உலகத் தரம் வாய்ந்த உடற்கூறியல் ஆய்வகம், ஐ.ஐ.டி சென்னையில் மருத்துவக் கல்வியில் ஒரு படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மருத்துவ அறிவியலுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், எதிர்கால சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் புதுமைக்கான தனித்துவமான தளத்தை நாங்கள் உருவாக்குகிறோம்,” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.