கான்பூர் ஐ.ஐ.டி-யின் முன்னாள் மாணவர் தீரஜ் சிங் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, சென்னை ஐ.ஐ.டி பட்டதாரிகள் 45% பேர் வேலைவாய்ப்பு (பிளேஸ்மெண்ட்) பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், 45% அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறவில்லை எனக் கூறும் தகவலை சென்னை ஐ.ஐ.டி மறுத்துள்ளது.
கான்பூர் ஐ.ஐ.டி-யின் முன்னாள் மாணவர் தீரஜ் சிங் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, சென்னை ஐ.ஐ.டி பட்டதாரிகள் 45% பேர் வேலைவாய்ப்பு பெறவில்லை என்ற தகவல் வெளியாகி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகழ்பெற்ற சென்னை ஐ.ஐ.டி-யில் 45% பேர் வேலைவாய்ப்பு பெறவில்லை என்ற தகவல் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
தீரஜ் சிங் பெற்ற ஆர்.டி.ஐ. தகவல்களின்படி, முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு, ஐ.ஐ.டி-களில் இடம் பெறாத மாணவர்களின் எண்ணிக்கையில் உயர்வு காண முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, 2024 ஆம் ஆண்டு ஐ.ஐ.டி பட்டதாரி வேலை வாய்ப்பு அறிக்கையில், 2,100 மாணவர்கள் வேலைவாய்ப்பு பிளேஸ்மெண்ட் வாய்ப்புகளுக்காக பதிவு செய்துள்ளனர். இவர்களில், 1,150 மாணவர்கள், 1ம் கட்டம் அல்லது 2ம் கட்டம் ஆகிய இரண்டிலுமே வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர், மேலும், 950 மாணவர்கள் இன்னும் வேலை வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
இவற்றில், தற்போதைய வேலை வாய்ப்பு பிளேஸ்மெண்ட்டைத் தொடர்ந்து, பதிவுசெய்யப்பட்ட மாணவர்களில் சுமார் 45.2 சதவீதம் பேர் இடம் பெறாமல் போகலாம் என்று சிங் கணித்துள்ளார்.
இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி மாணவர்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் வேலைவாய்ப்பு பெறவில்லை என்ற அறிக்கையை மறுத்துள்ள சென்னை ஐ.ஐ.டி நிறுவனம், வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறுதி வேலைவாய்ப்புத் தரவு ஜூலை 2024 இறுதியில், பட்டமளிப்புக்குப் பின் கிடைக்கும் என்றும் சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி-யில் வேலை வாய்ப்புகள் இன்னும் தொடர்கின்றன. மாணவர்கள் பல்வேறு ஆர்வங்களுடன் உள்ளனர் - சிலர் உயர் படிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளனர், மற்றவர்கள் தங்கள் சொந்த முயற்சிகளைத் தொடங்கவும், தொழில்முனைவோரை ஆராயவும் விரும்புகிறார்கள், சிலர் சிவில் சர்வீசஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். இந்த முடிவுகளை எடுக்க அவர்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். 2024 ஜூலை இறுதியில், பட்டமளிப்பு விழாவிற்குப் பிறகு வேலை வாய்ப்புத் தரவு கிடைக்கும்” என்று சென்னை ஐ.ஐ.டி ஆங்கில செய்தி இணையதளத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“