ஒட்டுமொத்த NIRF 2023 பட்டியலில் ஐ.ஐ.டி மெட்ராஸ் முதலிடத்தில் உள்ளது. (கோப்பு படம்)
NIRF சிறந்த கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியல் 2023: கல்வி அமைச்சகம் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசையை இன்று அறிவித்தது. ஒட்டுமொத்த பிரிவின் கீழ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மெட்ராஸ் சிறந்த கல்வி நிறுவனம் ஆகும். ஐ.ஐ.டி மெட்ரஸ் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக (2019 முதல் 2023 வரை) ஒட்டுமொத்தப் பிரிவிலும், தொடர்ந்து எட்டாவது ஆண்டாக (2016 முதல் 2023 வரை) பொறியியல் பிரிவிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Advertisment
அடுத்ததடுத்த இடங்களில் ஐ.ஐ.எஸ்.சி பெங்களூரு மற்றும் ஐ.ஐ.டி-டெல்லி, ஐ.ஐ.டி பாம்பே மற்றும் ஐ.ஐ.டி கான்பூர் ஆகியவை முறையே உள்ளன.
“கல்வி அமைச்சகத்தினால் மதிப்பீடு அங்கீகார அளவுருக்களை ஆராய டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிட்டி அமைக்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களின் தரவுகளும் விரல் நுனியில் கிடைக்கும். ஒரு தேசம் ஒரு தரவு செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது,” என்று அனில் சஹஸ்ரபுத்தே கூறினார்.
“நாங்கள் நான்கு பிரிவுகளுடன் NIRF ஐத் தொடங்கினோம். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதும், மாணவர்கள் முடிவுகளை எடுக்க உதவுவதும் இதன் நோக்கமாக இருந்தது. 8வது பதிப்பில், 8 பாடம் சார்ந்த தரவரிசைகள் உட்பட 12 பிரிவுகள் எங்களிடம் உள்ளன,” என்று இன்று காலை NIRF தரவரிசை வெளியீட்டைக் குறிக்கும் நிகழ்வில் NBA (NIRFஐத் தயாரிக்கும்) உறுப்பினர் செயலர் அனில் குமார் நாசா கூறுகிறார்.
இந்த ஆண்டு, NIRF ஒரு புதிய துறையைச் சேர்த்துள்ளது, அதாவது விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள். மேலும், கட்டிடக்கலை துறையானது கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, நான்கு பிரிவுகள் மட்டுமே இருந்தன, அவை ஒட்டுமொத்த, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஏழு பாட களங்கள் இருந்தன. அவை பொறியியல், மேலாண்மை, மருந்தகம், சட்டம், மருத்துவம், கட்டிடக்கலை மற்றும் பல் மருத்துவம்.
NIRF 2022 தரவரிசையில், IISc பெங்களூர் ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகங்கள் பிரிவின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் முதல் இடத்தைப் பிடித்தது, ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஒட்டுமொத்த தரவரிசைப் பிரிவில் ஐ.ஐ.டி மெட்ராஸ் முதல் இடத்தைப் பிடித்தது.
இதற்கிடையில், ஐ.ஐ.எம் அகமதாபாத் மேலாண்மை கல்லூரியில் முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டு, சுமார் 670 நிறுவனங்கள் தரவரிசையில் பங்கேற்றன, அவற்றில் 387 ஆய்வு வெளியீடுகள் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil