சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தால் நிதியுதவி அளிக்கப்பட்ட GUVI (ஜியுவிஐ) ஸ்டார்ட்- அப் நிறுவனம், வரும் மாதங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நிரலாக்கல் பயிற்சியை அளிக்க திட்டமிட்டுள்ளதுள்ளது.
பிராந்திய மொழிகளில் இணையவழி கற்றல்திட்டம் மூலம் மாணவர்களுக்கு கோடிங் பயிற்சி வழங்குகிறது. ஏற்கனவே ஐந்து லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்கின்ற வகையில் கோடிங் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய துறைகளில் தேவைப்படும் தொழில்நுட்ப திறன்களையும் இது வழங்குகிறது.
இந்த ஸ்டார்ட் - அப் நிறுவனம் ஐ.ஐ.டி-சான்றிதழ் படிப்புகளையும், நிபுணத்துவ படிப்புகளையும் வழங்குகிறது. சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது.
இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ்.பி.பாலமுருகன் இதுகுறித்து கூறுகையில், " தொழில்நுட்பக் கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை குறைக்கும் நோக்கில், அடுத்த ஆண்டுக்குள் 10 மில்லியன் புரோகிராமர்களை உருவாக்க திட்டமிட்டுளோம். பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை கொண்டு செல்கிறோம். மாணவர்களுக்கு பெரு நிறுவனங்களுடன் நேர்காணல் வாய்ப்புகளையும் ஏற்பாடு செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.
சென்னை ஐஐடி- யின் டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமி கூட்டு சான்றிதழ் படிப்புகளை வழங்கவும், அண்ணா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்கான தொழில்துறை கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகவல்கள் பெற www.guvi.in என்ற இணைய முகவரியை அணுகவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil