சென்னை ஐ.ஐ.டி டூயல் டிகிரி திட்டம் அறிமுகம்; தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை ஐ.ஐ.டி டூயல் டிகிரி திட்டம் அறிமுகம்; நிதி சார்ந்த துறைகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இந்தப் படிப்புகளை தேர்வு செய்யலாம்

சென்னை ஐ.ஐ.டி டூயல் டிகிரி திட்டம் அறிமுகம்; நிதி சார்ந்த துறைகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இந்தப் படிப்புகளை தேர்வு செய்யலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை ஐ.ஐ.டி டூயல் டிகிரி திட்டம் அறிமுகம்; தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?

Deeksha Teri

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (IIT Madras) 'குவாண்டிடேட்டிவ் ஃபைனான்ஸ்' குறித்த புதிய இடைநிலை இரட்டை பட்டப்படிப்பு (IDDD) திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ஐ.ஐ.டி மெட்ராஸ் இணையதளத்தில் - iitm.ac.in இல் இந்த திட்டத்தை சரிபார்த்து பதிவு செய்யலாம்.

Advertisment

பி.டெக் இரட்டைப் பட்டப்படிப்பு (B.Tech Dual Degree) என்பது மாணவர்களுக்கு மேலாண்மை படிப்புகள், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகள் இணைந்து இந்தப் பாடத்திட்டத்தை வழங்குகின்றன.

இதையும் படியுங்கள்: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வே தொடரும்; எய்ம்ஸ்க்கான தனி நுழைவுத் தேர்வு கோரிக்கை நிராகரிப்பு

ஐ.ஐ.டி மெட்ராஸில் பொறியியல் துறைகளின் அனைத்துப் பிரிவுகளின் இளங்கலை மாணவர்களுக்கு 'குவாண்டிடேட்டிவ் ஃபைனான்ஸ்' படிப்புக்கான இடைநிலை இரட்டைப் பட்டப்படிப்புத் திட்டம் திறக்கப்பட்டுள்ளது. இது தவிர, தற்போதுள்ள மாணவர்கள் கூட தங்கள் ஆறாவது செமஸ்டரிலிருந்து 'குவாண்டிடேட்டிவ் ஃபைனான்ஸ்' படிப்பைத் தொடர தேர்வு செய்யலாம்.

Advertisment
Advertisements

நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ காலக்கெடுவின்படி, படிப்பில் 25 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் மற்றும் முதல் தொகுதி மாணவர்கள் ஜனவரி 2023 இல் சேருவார்கள். ஐந்தாவது ஆண்டில், பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் தொழில்துறையைப் பயன்படுத்தி பாடத்தின் போது கற்றுக்கொண்ட கருவிகள் மற்றும் நுட்பங்கள் மூலம் ஆறு மாதங்களுக்கு ஒரு திட்டத்தை மேற்கொள்வார்கள். இந்த படிப்பை முடித்த பிறகு, பட்டதாரி மாணவர்கள் Fintech நிறுவனங்கள், நிதி இடைத்தரகர்கள் மற்றும் போர்ட்ஃபோலியோ மேலாண்மை நிறுவனங்களில் இலாபகரமான வேலை வாய்ப்புகளைக் கண்டறியத் தயாராக இருப்பார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: