JEE Main 2024: இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras - ஐ.ஐ.டி மெட்ராஸ்) இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கைக்கான விளையாட்டு ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. ஒரு ‘ஸ்போர்ட்ஸ் எக்ஸலன்ஸ் அட்மிஷன்’ (SEA) 2024-2025 கல்வியாண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும், இதன் கீழ் ஐ.ஐ.டி மெட்ராஸ் இரண்டு இளங்கலை பொறியியல் இடங்களை வழங்க முற்படுகிறது, அதில் ஒன்று பெண் மாணவர்களுக்கு பிரத்தியேகமாக இருக்கும்.
ஆங்கிலத்தில் படிக்க: IIT Madras introduces sports quota for admission to BTech courses
SEA மூலம் சேர்க்கை செயல்முறையில் பங்கு பெற மாணவர் JEE அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றாலும், சீட் ஒதுக்கீடு கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) போர்டல் மூலம் இருக்க முடியாது. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் ஐ.ஐ.டி மெட்ராஸ் சேர்க்கை நிறுவனம் நடத்தும் தனி போர்டல் மூலம் சீட் ஒதுக்கீடு நடைபெறும். இது https://jeeadv.iitm.ac.in/sea/
இந்தத் திட்டத்தின் மூலம் சேர்க்கைக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் பொது தரவரிசைப் பட்டியல் (CRL) அல்லது ஜே.இ.இ அட்வான்ஸ்டில் பிரிவு வாரியான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும், மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய அல்லது சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது வென்றிருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட விளையாட்டுப் பட்டியலில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு தனி ‘விளையாட்டு தரவரிசைப் பட்டியல்’ (SRL) தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலின் அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஐ.ஐ.டி மெட்ராஸ் மேம்பட்ட உபகரணங்களுடன் ஒரு விளையாட்டு வளாகத்தையும் தொடங்கும் என்று இயக்குனர் வி.காமகோடி அறிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் விளையாட்டு ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும் இந்த முயற்சி, விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வெகுமதி அளிப்பதாகும். இந்தத் திட்டம் தகுதியான மாணவர்களை அவர்களின் விளையாட்டுகளில் தொடர்ந்து சிறந்து விளங்கும் அதே வேளையில் உயர் கல்வியைத் தொடர ஊக்குவிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“