ஐ.ஐ.டி மெட்ராஸ் சான்சிபார் வளாகம்; பி.எஸ், எம்.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஐ.ஐ.டி மெட்ராஸ் சான்சிபார் வளாகம் தரவு அறிவியல் மற்றும் AI இல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வழங்குகிறது; விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி மெட்ராஸ் சான்சிபார் வளாகம் தரவு அறிவியல் மற்றும் AI இல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வழங்குகிறது; விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IITM Zanzibar

ஐ.ஐ.டி மெட்ராஸ் சான்சிபார் வளாகம்

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி), மெட்ராஸ் அதன் சான்சிபார் வளாகத்தில் வழங்கப்படும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் புதிதாக தொடங்கப்பட்ட ஐ.ஐ,டி மெட்ராஸ் சான்சிபார் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் — zanzibar.iitm.ac.in.

Advertisment

புதிய வளாகத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 வரை விண்ணப்பதாரர்களுக்கு அவகாசம் உள்ளது. தேர்வுச் செயல்பாட்டில் ஸ்கிரீனிங் சோதனை (இது கணிதம், அறிவியல், ஆங்கிலம் மற்றும் பகுப்பாய்வு திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய திறனாய்வுத் தேர்வு), மற்றும் ஆசிரியர்களுடன் நேர்காணல் ஆகியவை இருக்கும்.

இதையும் படியுங்கள்: டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்: ஐ.ஐ.டி மெட்ராஸின் 5 ஆண்டு தரவரிசை

தகுதிகள்

Advertisment
Advertisements

கடந்த மூன்று ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு, வகை VI அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்த மாணவர்கள் BS படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், அதே நேரத்தில் ஏதேனும் பொறியியல்/அறிவியல் துறையில் நான்கு ஆண்டு UG பட்டம் பெற்றவர்கள் MTech படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஐ.டி மெட்ராஸ் சான்சிபார் வளாகம் தரவு அறிவியல் மற்றும் AI இல் நான்கு ஆண்டு இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது தரவு அறிவியல் மற்றும் AI இல் இரண்டு ஆண்டு முதுகலை தொழில்நுட்ப பட்டம் வழங்கும். மாணவர் சேர்க்கை கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகளைப் பொறுத்து அமையும்.

மாணவர்கள் தங்கள் படிப்பின் போது பல வாய்ப்புகளை அணுகலாம், வெளிநாடுகளில் படிப்பது/ இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஐ.ஐ.டி மெட்ராஸின் (IITM) கூட்டாளர் நிறுவனங்களுடனான செமஸ்டர் பரிமாற்ற திட்டங்கள் உட்பட, பல்வேறு தொடர்புடைய நிறுவனங்களுடனான இன்டர்ன்ஷிப் மற்றும் இந்தியாவின் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில் சில பாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றை மாணவர்கள் அணுகலாம்.

புதிய சர்வதேச வளாகத்தில் உள்ள படிப்புகள் இந்தியர்கள் உட்பட அனைத்து நாட்டினரின் மாணவர்களுக்கும் திறந்திருக்கும்.

ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் சமூகம் ஒன்று கூடி, 1 ஆண்டுக்கான (2023-'24) கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை, ஐந்து தகுதியுள்ள மாணவர்களுக்கான நிதியுதவியாக வழங்கியுள்ளது. விண்ணப்ப செயல்முறை முடிந்ததும், ஐ.ஐ.டி மெட்ராஸ் தகுதியான அனைத்து மாணவர்களையும் தொடர்பு கொண்டு, நிதியுதவிக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளும் மற்றும் எங்கள் முடிவை எடுப்பதற்கான தகவலை மதிப்பாய்வு செய்யும். இவை செப்டம்பர் பிற்பகுதியில் அறிவிக்கப்படும், மேலும் நிதியுதவி பெற்றவர்கள் வழிகாட்டுதலுக்காக ஆன்லைனில் நிதியுதவி செய்யும் முன்னாள் மாணவர்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மேலும், சான்சிபார் ஸ்க்ரீனிங் டெஸ்டில் (இளங்கலைப் பட்டப்படிப்பு) சிறந்த 5 பேர் பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படும், மேலும் இவற்றுக்கான முடிவுகள் செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: